Viduthalai :அதிகரித்த திரையரங்குகள் எண்ணிக்கை.. வெற்றிகரமான 3வது வாரத்தில் விடுதலை!

சென்னை : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விடுதலை படம்.

சிம்புவின் பத்து தல படத்துடன் சேர்ந்து வெளியானது விடுதலை படம். இந்தப் படம் தற்போது சிறப்பான விமர்சனங்கள் மற்றும் வசூலை குவித்து வருகிறது.

Vetrimaarans Viduthalai movie enters in 3rd week and the screen count increases

கடந்த 14ம் தேதி 8 படங்கள் ரிலீசான நிலையிலும் விடுதலை படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

3வது வாரத்தில் விடுதலை படம் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் விடுதலை. இந்தப் படம் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. சிம்புவின் பத்து தல படத்துடன் இணைந்து விடுதலை படம் ரிலீசான நிலையில், சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் படம் குவித்து வருகிறது. இயற்கை வளங்கள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது.

Vetrimaarans Viduthalai movie enters in 3rd week and the screen count increases

படத்தின் கேரக்டர் தேர்வில் எப்போதுமே சிறப்பாக செயல்படுபவர் வெற்றிமாறன். அந்த வகையில் விடுதலை படத்திலும் கேரக்டர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கேரக்டரில் சூரி சிறப்பாக பொருந்தியுள்ளார். இதேபோல வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் கேரியர் பெஸ்ட்டாக அமைந்துள்ளது. தமிழில் கடந்த இரு வாரங்களை கடந்து வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் இநத்ப் படம் அடியெடுத்து வைத்துள்ளது.

படம் தற்போது தெலுங்கிலும் வெளியாகியுள்ள நிலையில், தெலுங்கு ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் அங்கும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், இரண்டாவது பாகத்தையும் 4 மாதத்திற்குள் ரிலீஸ் செய்ய வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். இதனால் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை விரைவில் துவக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் ஒருசில பேட்ச் வேலைகளே மீதமுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vetrimaarans Viduthalai movie enters in 3rd week and the screen count increases

படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்தின் சில காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் சில சிஜி வேலைகளையும் மேற்கொள்ளவுள்ளதால் படத்தின் ரிலீசில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எது எப்படியோ, முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மறைவதற்குள் இரண்டாவது பாகம் வெளியாவதுதான் சிறப்பாக அமையும்.

இந்நிலையில் விடுதலை படம் மூன்றாவது வாரத்தில் தற்போது நடைபோட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தாண்டையொட்டி 8 படங்கள் ரிலீசான நிலையில், தற்போது அந்தப் படங்களை தாண்டி, விடுதலை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. மூன்றாவது வாரத்தில் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக படத்தின் ஹீரோ சூரி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்ச்சி தெரிவித்துள்ளார். தெலுங்கில் படத்திற்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X