நிர்வாண காட்சிக்கு கத்திரிப்போட மறுத்த வெற்றிமாறன்.. விடுதலை படத்துக்கு ஏ சான்றிதழ்!
சென்னை : வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கௌதம் மேனன் என ஏராளமானோர் நடித்துள்ளனர்
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில், தனுஷ் பாடிய உன்னோடு நடந்த பாடலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

வெற்றிமாறனின் விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்த படத்தில் கான்ஸ்டபிளாக நடித்துள்ளதால், தாறுமாறாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்குடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். இதில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக நடித்துள்ளார். விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி படத்தின் மீதான ஆவலைத்தூண்டிய நிலையில் டீசர் வெளியாகி படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மார்ச் 31ந் தேதி ரிலீஸ்
சிம்புவின் பத்துதல திரைப்படம் மார்ச் 30ந் தேதி வெளியாக உள்ள நிலையில், வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் மார்ச் 31ந் தேதி வெளியாக உள்ளநிலையில், இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. வெற்றிமாறனின் பொல்லாதவன், வடசென்னை படத்திற்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் கொடுத்த நிலையில், விடுதலைப்படத்திற்கும் ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது.

கத்திரிப்போட மறுத்த வெற்றிமாறன்
அண்மையில் வெளியான விடுதலை படத்தின் டிரைலரிலேயே ஒரு காட்சியில் பெருமாள் வாத்தியாரான விஜய்சேதுபதியை பிடிக்க போலீஸார், அந்த ஊர் பெண்களை அடித்து துன்புறுத்தி ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தும் காட்சி டிரைலரிலேயே இடம்பிடித்து இருந்தது. இந்த காட்சி தான் படத்தின் உயிரோட்டத்திற்கு முக்கியமான காட்சி என்பதால், வெற்றிமாறன் இந்த காட்சிக்கு கத்திரிப்போட மறுத்துவிட்டதால் விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











