கண்டபடி அடி வாங்கும் சூரி.. பார்க்கும்போதே பதறுதே - வெளியானது விடுதலை மேக்கிங் வீடியோ

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக அவர் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார்.

வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறனின் விடுதலை

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸாகிறது. வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

கவனம் ஈர்த்த வெற்றிமாறனின் விடுதலை ட்ரெய்லர்

கவனம் ஈர்த்த வெற்றிமாறனின் விடுதலை ட்ரெய்லர்

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். விடுதலை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள்; நிச்சயம் இந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பும் என்பதை உணர்த்துகிறது.

இளையராஜாவின் அட்டகாசமான இசை

இளையராஜாவின் அட்டகாசமான இசை

ட்ரெய்லர் போலவே இளையராஜாவின் இசையும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, உன்னோடு நடந்தால், காட்டு மல்லி ஆகிய பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைத்திருக்கின்றன. அதேபோல் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பின்னணி இசையும் கவனம் ஈர்த்துள்ளது. எனவே, படம் முழுக்க இளையராஜாவின் மேஜிக் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் இளையராஜாவின் ரசிகர்கள்.

மெர்சல் செய்த மேக்கிங் வீடியோ

மெர்சல் செய்த மேக்கிங் வீடியோ

இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. இந்த மேக்கிங் வீடியோவில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் காட்சிகளும், அவர்களுக்கு வெற்றிமாறன் சொல்லிக்கொடுப்பதும், நடித்துக்காண்பிப்பதுமான க்ளிப்பிங்குகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக சூரியை இந்தப் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.

சூரிக்கு குவியும் பாராட்டு

சூரிக்கு குவியும் பாராட்டு

ட்ரெய்லரின் ஒரு காட்சியில் துப்பாக்கியோடு வீட்டின் ஓடு மேல் அவர் டைவ் அடிக்கும் காட்சி அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. அந்த சீனை அவர் எப்படி நடித்தார் என்பது குறித்த க்ளிப்பிங்குகள் இந்த மேக்கிங் வீடியோவில் இருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் சூரிக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி இந்தப் படம் சூரிக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X