Chetan : காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியா? மோசமா திட்டுறாங்க.. நொந்து போன சேத்தன்!

சென்னை : காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியா? மோசமாக திட்டுறாங்க என்று பேட்டி ஒன்றில் நடிகர் சேத்தன் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ளது.

இதில், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அனைவரும் மிரண்டு போகும் அளவுக்கு தரமான ஒளிப்பதிவினை கொடுத்துள்ளார்.

விடுதலை

விடுதலை

இணையத்தில் அதிகம் பேசப்படும் படமாக மாறி உள்ளது விடுதலை. படத்தின் ஆரம்பத்தில் ரயில் விபத்து காட்சியிலையே ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஒடுக்கப்பட்ட மக்களின் ரணத்தையும், விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை கொடுமைப்படுத்துவதையும் படம் அப்பட்டமாக காட்டி உள்ளது. படத்தின் பலகாட்சிகள் கண்ணீரை வரவைத்து மனதை பதைபதைக்க வைத்துவிட்டது. திரையரங்கை விட்டு வெளியேறிய பிறகும் இதன் தாக்கம் மனதைவிட்டு அகலவில்லை.

நடிகர் சேத்தன் பேட்டி

நடிகர் சேத்தன் பேட்டி

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் பிரபல நடிகர் சேத்தன், பல ஆண்டுகளாக சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து வந்த சேத்தன் விடுதலை படத்தில் OC என்ற கதாபாத்திரத்தில் அனைவரும் மிரண்டுபோகும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் சேத்தன் விடுதலைப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

அருவருப்பான போலீஸ்

அருவருப்பான போலீஸ்

அதில், ரொம்ப நாளான இதுபோன்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அந்த ஆசை இன்று நிறைவேறி உள்ளது. இந்த மாதிரி அருவருப்பான போலீஸ் இருப்பாங்களா என்று அனைவரும் யோசிக்கும் வகையில் இருக்கும் ஒரு கதாபாத்திரம். இப்படிப்பட்டவர்கள் போலீஸ் துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியா?

காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியா?

படம் பார்த்த நிறையே பேர் திட்டி மெசேஜ் பண்றாங்க, இந்த மாதிரி சீப்பான கேரக்டரை பணத்திற்காக பண்ணாதீங்க என்று திட்டுகிறார்கள். நான் அதை நெகட்டிவ் விமர்சனமாக பார்க்கவில்லை அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பாகத்தான் நான் பார்க்கிறேன். என் கதாபாத்திரம் என்ன, நான் என்ன பண்ண வேண்டும், என்பதை எல்லாம் வெற்றிமாறன் முடிவு செய்து வைத்திருந்தார். அதைத்தான் நான் செய்தேன் அந்த கேரக்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சேத்தன் பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X