விஜய் 68 டைரக்டர் வெங்கட் பிரபுவுக்கே இத்தனை கோடி தான்... ஆனால் வெற்றிமாறன் சம்பளம்... அடேங்கப்பா!

சென்னை: வெற்றிமாறன் இயக்கி விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விடுதலை 2ம் பாகம் வெளியானதும் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்தப் படத்திற்காக வெற்றிமாறனின் சம்பளம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் சம்பளம் இத்தனை கோடியா? தமிழ்த் திரையுலகில் தனித்துவமான இயக்குநராக வலம் வருகிறார் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது.

விடுதலை 2ம் பாகம் வெளியானதுமே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள வாடிவாசல் படம் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு வெற்றிமாறனின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 Vetrimaaran Salary: Vetrimaaran is paid 25 crores for Suriyas Vaadivasal film

வாடிவாசல் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியிருந்தார். அதனால் பட்ஜெட்டை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை இயக்குவதற்காக வெற்றிமாறனுக்கு 25 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை படத்திற்கே 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளாராம் வெற்றிமாறன்.

முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக வெற்றிமாறனுக்கு சம்பளம் கொடுக்கப்படவிருப்பது கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தை இயக்க வெங்கட் பிரபுவுக்கு 10 கோடி தான் சம்பளம் என சொல்லப்படுகிறது.

விஜய்யின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதாரணமாக 100 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறது. அப்படியிருக்கும் போது பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபுவுக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் வெற்றிமாறன், வெங்கட் பிரபு ஆகியோரின் சம்பளம் குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X