அரசன் படத்தை விட்டுவிட்டு அடுத்த படத்துக்கு போன வெற்றிமாறன்?.. ஷூட்டிங்கே தொடங்கிட்டாராம்

சென்னை: வெற்றிமாறனும், சிம்புவும் அரசன் படத்தில் இணைந்தார்கள். பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் முதல்முறையாக இரண்டு பேரும் சேர்ந்ததால் இருவரின் ரசிகர்களுமே மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தடைபட்டது. இதன் காரணமாக டி.ராஜேந்தரும் களத்தில் குதித்திருந்தார். இந்நிலையில் அரசன் படத்தை அப்படியே விட்டுவிட்டு ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கிற்கு வெற்றி சென்றுவிட்டாராம்.

இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான படங்களில் தனுஷ்தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவை மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கின்றன. அவர் இயக்கிய வடசென்னை படத்திலேயே முதலில் சிம்புதான் கதாநாயகனாக கமிட் ஆனார். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து சிம்புவும், வடசென்னையும் எப்போது சேர்வார்கள் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பலமாகவே எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran Shifts to Rajan Vagaira Shoot Amid Arasan Delay STR Film to Resume Soon
Photo Credit:

அரசன் கூட்டணி: அதன்படி சிம்புவும், வெற்றிமாறனும் அரசன் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். முதல்முறையாக அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திருப்பதால் இப்படத்தின் மீது ஆவல் அதிகரித்திருந்தது. முதலில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பிரேக் விடப்பட்டு சென்னையில் இரண்டாம் ஷெட்யூலுக்கான ஷூட்டிங் தொடங்கியது. சிம்புவும் ஆர்வமாக கலந்துகொண்டார்.

Also Read
MR X ட்விட்டர் விமர்சனம்.. படம் பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா?
MR X ட்விட்டர் விமர்சனம்.. படம் பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா?

அரசன் ஷூட்டிங் பிரச்னை: இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி மட்டுமின்றி அமீர், கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு,சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சரும் நடித்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க திடீரென படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதாவது வேல்ஸ் நிறுவனம் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதுதொடர்பான விஷயத்துக்காக படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ராஜேந்தரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

எப்போது ஷூட்டிங்?: இவ்விவகாரத்தில் தயாரிப்பாளருக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் சங்கம் நிற்கும்போது: சிம்புவுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நிற்கக்கூடாது. சிம்புவுக்கு துணையாக நிறக் வேண்டும் என கோரிக்கை வைத்துக்கொண்டார். மேலும் ஐசரி கணேஷ் வழக்கு தொடர்ந்தபோது சிம்புவின் பிரதிநிதியாஅ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி நான் வென்று வந்திருக்கிறேன். அட்வான்ஸ் தொகை சிம்புவுக்கே சொந்தம் என்ற தீர்ப்பையும் நீதிபதி வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.

புது பட ஷூட்டிங்: ஒருவழியாக அந்தப் பிரச்னையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. சூழல் இப்படி இருக்க திடீரென வெற்றிமாறன் ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்கிவிட்டாராம். அதில் அமீர், கிஷோர் ஆகியோர் நடித்ததாகவும் ராஜன் மற்றும் செந்தில் ஆகியோருக்கான பிளாஷ்பேக் காட்சியை படமாக்கியதாகவும் தெரிகிறது. மேலும் அரசன் படத்தின் ஷூட்டிங் வரும் 21ஆம் தேதியிலிருந்து தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X