சூரி ஹீரோவாகும் வெற்றிமாறனின் புதிய படம்...2 ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது

சென்னை : டைரக்டர் வெற்றி மாறன், சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கிடையில் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அசுரன் படத்திற்காக சிறந்த டைரக்டருக்கான விருது வெற்றிமாறனுக்கு கிடைத்தது. சிறந்த தமிழ் படத்திற்கான விருதினையும் அசுரன் படம் பெற்றது. இந்த படத்தின் ஹீரோவான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

பல படங்களை கையில் வைத்திருப்பதால் பயங்கர பிஸியான டைரக்டர் ஆகி விட்டார் வெற்றி மாறன். சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

Vetrimaaran - soori project second schedule is completed

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்த இந்த படம் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தின் டைட்டில் பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டில் நேற்று முடிவடைந்துள்ளது.

சூரி ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத இந்த படத்துடன், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சூரி, ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ரஜினி நடித்த விடுதலை படத்தின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அது பற்றி எந்த உறுதியான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X