Vetrimaaran - சினிமா துறைக்கு இல்லை ஆனால் கலைக்கு உண்டு - வெற்றிமாறன் அதிரடி

சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) சினிமா துறைக்கு மொழி இல்லை ஆனால் கலைக்கு மொழி உண்டு என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரி பாவனி ஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார். நக்சல்பாரி இயக்கத்தை சேர்ந்த தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது

Vetrimaaran Speaks about sounth indian Movies

சூரிக்கு குவிந்த பாராட்டு: படத்தின் நாயகனாக சூரி குமரேசன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இதுவரை அவரை காமெடியனாக மட்டும் பார்த்திருந்த ரசிகர்கள் விடுதலையில் அவரது நடிப்பை பார்த்து வாயடைத்து போயினர். ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் எடுத்த ரிஸ்க் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து நிச்சயம் விடுதலை படம் சூரிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என பலரும் ஆரூடம் கூறிவருகின்றனர்.

விடுதலை 2 எப்போது?: விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானதை அடுத்து அதன் இரண்டாவது பாகம் இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் விடுதலை முதல் பாகம் சில விமர்சனங்களை பெற்றதை அடுத்து இரண்டாவது பாகத்தை இன்னும் மெருகேற்றுவதற்காக ரிலீஸை வெற்றிமாறன் தள்ளி வைத்திருப்பதாகவும், டிசம்பர் மாதம்தான் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Vetrimaaran Speaks about sounth indian Movies

வெற்றிமாறன் பேச்சு: இந்நிலையில், தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட வெற்றிமாறன் பேசுகையில், " நம் கதையை, நம் மக்களுக்காக, நம் மொழியில் உணர்வுகளை பிரதிபலித்து படங்கள் எடுப்பதால் தான் நாம் இந்தளவுக்கு வெற்றிகளை பெற முடிந்துள்ளது. ஆஸ்கர் விருது பெறுவதற்கு படம் எடுப்பதற்கு பதில் நமது மொழியில், நமது உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வதுதான் வெற்றி.

கலைக்கு மொழி உண்டு: சினிமா துறைக்கு மொழி கிடையாது. ஆனால் கலைக்கு மொழி உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மண் சார்ந்த படைப்புகள் அதிக அளவு வருவதால் அது எல்லைகளை கடந்து அனைத்து தரப்பினரையும் சென்று அடைகிறது. தென்னிந்திய திரைப்படங்கள் எல்லை கடந்து அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளதால் வருவாயும் பெருகி உள்ளது. தனித்துவமான நம் மண் சார்ந்த கதைகளை செய்வதே வெற்றிக்கு காரணம் .

தென்னிந்திய படங்களுக்கு ஏன் வெற்றி: நம்முடைய அடையாளங்கள், தனித்துவங்கள், பெருமைகளைக் கொண்ட மண் சார்ந்த கதைகளை எடுப்பதால்தான் தென்னிந்திய படங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இதை செய்யாமல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டுமே படங்களை எடுப்பதால் தான் பிற மொழி திரைத்துறையினரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X