அணு அணுவாக அரசனை வெட்டி வெட்டி செதுக்கும் வெற்றிமாறன்.. STR க்கு லைப் டைம் செட்டில்மெண்ட் ரெடி
மதுரை: வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் அரசன். சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் படப்பிடிப்புத் தள காட்சிகள் தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
STR சிம்பு நடிக்கும் படமான அரசன் படத்தின் ப்ரோமோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் அந்த அறிவிப்பு வீடியோவில் சிம்புவின் இரண்டு லுக், அனிருத்தின் இசை உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் முரட்டு வரவேற்பைப் பெற்றது. அதுவும் கோர்ட் காட்சி, கொலை காட்சி என இரண்டுமே அசத்தல் தான்.

சிம்பு மற்றும் வெற்றி மாறனுடன் அனிருத் இணைந்து பணியாற்றுகிறார் எனும்போது, இசை எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அனிருத்தின் பின்னணி இசை வேற லெவலில் இருந்தது. படத்தின் இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு எனும் போது, படத்தின் மீது பெரும் நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
அதுவும் படத்தில் விஜய் சேதுபதி இணைந்து விட்டார் என்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறி விட்டது. இப்படி இருக்கும்போது படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு தள காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் வெற்றி மாறன், தனது அரசனை அணு அணுவாக வெட்டி வெட்டி செதுக்கிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறர்கள்.
டைட்டில் ப்ரோமோ: அரசன் படத்தைப் பொறுத்தவரையில் படத்தின் படப்பிடிப்பு என்பது கடந்த 9ஆம் தேதியில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. படப்பித் தளத்திற்கு வரும் ரசிகர்களை கால்ஷீட் நேரம் முடிந்த பின்னர், சிம்பு ரசிகர்களை சந்தித்து பேசுகிறார், புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் கொடுக்கும் அன்பு பரிசுகளை வாங்கிக் கொள்கிறார். அரசன் படத்தின் கதை என்பது படுகொலை செய்யப்பட்ட மயிலை சிவக்குமாரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தியது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சமுத்திரக்கனி & சூரி: ப்ரோமோ படப்பிடிப்பு நடைபெற்ற காலத்தில் படப்பிடிப்புத் தளத்திற்கு நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, நடிகர் சூரி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்துள்ளனர். இது தொடர்பான காட்சிகளும் இந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தில் இவர்கள் இருவரும் இருக்கிறார்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











