Vetrimaaran - இன்னும் கொஞ்சம்தான்.. அப்புறம் அதுதான்.. வாடிவாசல் பற்றி சூப்பர் மேட்டர் சொன்ன வெற்றிமாறன்
சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) வாடிவாசல் படம் பற்றி வெற்றிமாறன் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் நடித்துவிட்டால் போதும் பெயரும் வந்துவிடும் பெரும் வெற்றியும் வந்துவிடும் என்ற எண்ணத்தில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிமாறனோ நடிகர்களுக்காக கதை எழுதாமல் கதை எந்த நடிகரை கேட்கிறதோ அவரை நடிக்க வைப்பவர்.

விடுதலை: அவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் இளையராஜாவின் இசையில் உருவாகியிருந்த அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் வெற்றிமாறனின் மேக்கிங் தரமாக இருந்ததாக ரசிகர்களில் பெரும்பாலானோர் சிலாகித்து கொண்டாடினர்.
விடுதலை 2: தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார். முதல் பாகத்துக்கு வந்த விமர்சனத்தில் இம்மியளவுக்கூட இதற்கு வந்துவிடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி மும்முரமாக உழைத்துவருகிறார் வெற்றி. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்தப் படம் பெரும் விவாதத்தை கிளப்பும் என்பதை நம்பலாம்.
வாடிவாசல்: வெற்றிமாறனின் கரியரிலேயே அவரது வாடிவாசல் படத்துக்கு மிகப்பெரிய ஹைப் ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய சிறுகதையை மையமாக வைத்து இயக்கவிருக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். முதன்முறையாக வெற்றிமாறனும் சூர்யாவும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் படத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
விடுதலையை முடித்துவிட்டு வாடிவாசலை அவர் தொடங்குவதாக இருந்தது. ஆனால் விடுதலை இரண்டு பாகங்களாக மாறியதால் வாடிவாசலை இன்னும் திறக்கவில்லை வெற்றிமாறன். ஒரு டெஸ்ட் ஷூட் மட்டுமே நடந்தது. அதற்கு பிறகு எந்த தகவலும் படத்தை பற்றி வராததால் ஒருவேளை படம் டிராப் ஆகிவிட்டதோ என்ற சந்தேகமும் ரசிகர்களிடம் எழுந்தது.
இந்நிலையில் வாடிவாசல் பற்றி வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், ""விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ்பேக் போர்ஷன் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. அதை முடித்தவுடனேயே வாடிவாசல் படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிடுவேன்"" என்றார். இதனால் ரசிகர்கள் படு உற்சாகமடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











