வெற்றி துரைசாமிக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன்.. எதுக்காக வெற்றி அங்கே போனார் தெரியுமா?

சென்னை: லியோ படத்தில் ஹைனாவை லோகேஷ் கனகராஜ் சிஜியில் காட்டிய நிலையில், பனி சிறுத்தை ஒன்று இமாச்சலில் இருக்கும் தகவல் தெரிந்து வைல்டு லைஃப் புகைப்படக்கலைஞரான வெற்றி துரைசாமி அதனை படம் பிடிக்கத்தான் சென்றார் என வெற்றிமாறன் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் வெற்றி துரைசாமி என்றும் வாடிவாசல் படத்துக்காக காளைகளையே அவர் தான் கொடுத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். தன்னுடைய படத்துக்கு எந்தவொரு பறவை வேண்டும் என்று கேட்டாலும் வெற்றி துரைசாமி நான் கொடுக்கிறேன் எனக் கொடுப்பார். அதே போலத்தான் விலங்குகளும் என வெற்றிமாறன் உருக்கத்துடன் பேசியுள்ளார்.

Vetrimaaran talks about Vetri Duraisamy at Ninaiventhal

வெற்றி துரைசாமி உயிரிழப்பு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகனும் வைல்டு லைஃப் போட்டோகிராஃபருமான வெற்றி துரைசாமி சினிமாவிலும் தனது ஆர்வத்தை அதிகம் காட்டி வந்திருக்கிறார். சினிமா படத்தை இயக்கவும் அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும் முயற்சித்து இருக்கிறார். சினிமா பிரபலங்களுடன் மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்த அவர் இமாச்சலுக்கு காரில் டூர் சென்ற நிலையில் அந்த கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். அவரது உடலை ஒரு வாரமாக தேடிய நிலையில், உடல் மீட்கப்பட்டு சென்னையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவேந்தல்: வெற்றி துரைசாமிக்கு சினிமா பிரபலங்கள் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், வெற்றிமாறன் பங்கேற்றார். நடிகர் அஜித்தின் நண்பரான வெற்றி துரைசாமி வெற்றிமாறனுக்கும் நல்ல நண்பராக இருந்துள்ளார். இருவரும் பல வருடங்கள் பழகி வந்த அனுபவங்களை வெற்றிமாறன் அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பகிர்ந்தார்.

கண்ணீர் அஞ்சலி: சில மனிதர்கள் நம்மை விட்டுப் பிரியும் போது தான் நம்மில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர் என கண்ணீர் மல்க வெற்றிமாறன் பேசி அஞ்சலி செலுத்தினார். White Leopard பார்க்கத்தான் இங்கே இருந்து கிளம்பிப் போயிருக்கிறார் வெற்றி. அவருக்கு இப்படி நடக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நேஷனல் ஜியாகிராபியில் எல்லாம் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதுகளை அவர் வென்றிருக்கிறார். பல வெளிநாட்டு காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று அரிய வகை உயிரினங்களை படம் எடுத்து வந்திருக்கிறார் என பல தகவல்களை வெற்றிமாறன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X