விடுதலை படம்தான் மெருகேற்றுகிறது.. இது எனக்கு ஊக்கம் தருகிறது.. வெற்றிமாறன் ஓபன் டாக்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரிலீஸானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தத் திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சூர்யாவை வைத்து அவர் வாடிவாசல் படத்தை இயக்க கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில் விடுதலை படத்துக்காக அவருக்கு CAIB விருது வழங்கப்பட்டது.

இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அதிக ரசிகர்கள் மட்டுமின்றி முக்கியத்துவம் பெற்ற இயக்குநராகவும் விளங்கிவருகிறார். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும், விசாரணை படத்துக்காக சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்திருக்கிறார் அவர். அவரது படம் என்றாலே சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பக்கூடியவை. அதற்கு பிறகு சில நல்ல விஷயங்களும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran Viduthalai 2 Vaadivaasal 2

விடுதலை, விடுதலை 2: முக்கியமாக புத்தகங்களை படமாக்கும் முறையை வெகுஜனப்படுத்தியிருக்கிறார் வெற்றி. அப்படி அவர் இயக்கிய விசாரணை (லாக் அப்), அசுரன் (வெக்கை), விடுதலை (துணைவன்) உள்ளிட்ட படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருக்கின்றன. புத்தகத்தை அப்படியே படமாக்காமல் அதில் தனது சமூக கருத்தையும் சேர்த்து கொடுப்பதால் அந்தப் படங்கள் வேறு தளத்துக்கு செல்வது வழக்கம். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 வெளியானது.

விடுதலை 2வுக்கு கலவையான விமர்சனம்: விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் விடுதலை 2 கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் படத்தின் ஆரம்ப காட்சிகள்; படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள், மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் உள்ளிட்டவைகள் பலத்த வரவேற்பை பெற்றன. முதல் பாகத்தில் சூரிக்கு இருந்த முக்கியத்துவம் இரண்டாவது பாகத்தில் இல்லை. விஜய் சேதுபதிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

வாடிவாசல் திறப்பு: இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க கமிட்டானார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறது. படத்துக்கான சிஜி பணிகள் எல்லாம் லண்டனில் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில்தான் வெற்றிமாறன், சூர்யா, தாணு ஆகிய மூன்று பேரும் சந்தித்தார்கள். அப்போது படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதாக தயாரிப்பாளர் தாணு மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.

விடுதலைதான் மெருகேற்றுகிறது: இந்நிலையில் விடுதலை படத்துக்காக CAIB விருது வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை பெற்றுக்கொண்ட வெற்றிமாறன், "விடுதலை திரைப்படம்தான் எனக்கு ரொம்பவே முக்கியமான திரைப்படம். எனினும் இன்னமும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வைக்கும் ஒரு திரைப்படம். இந்தப் படத்துக்காக எனக்கு விருது கொடுத்த ஜூரிக்கு நன்றி. இந்த விருது எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X