viduthalai 2: சம்பவத்திற்கு தயாரான விடுதலை 2.. புதிய தொழில் நுட்பம்.. மாஸ் காட்டும் வெற்றிமாறன்!

சென்னை: விடுதலை2 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோரை இளமையாக காட்ட, டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் வெற்றிமாறன் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகராக இருந்த சூரி முழு நேர சீரியஸ் நடிகராக விடுதலை படம் மூலம் மாறினார். காவல் அதிகாரியாக விடுதலை படத்தில் நடித்திருந்த இவர், தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்தார்.

vetrimaaran uses de-ageing technology in the film viduthalai part 2

விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாகி வசூலை அள்ளியது. இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக்: விடுதலை முதல் பாகத்தில் நாயகன் சூரியையும் கிராம மக்களையும் சுற்றி நிகழ்வது போல படத்தின் கதையம்சம் இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்ட அம்சங்கள் காண்பிக்கப்பட உள்ளன. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே சிறுமலை காடுகளில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய தொழில் நுட்பம்: அதாவது, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் படத்தில் வரும் பிளேஷ்பேக் காட்சிகளில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் கதாபாத்திரம் 1960 காலகட்டத்தில் அமைக்கப்படவுள்ளதால் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருவரையும் இளமையாக காட்ட இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். சூரியின் கதாபாத்திரம் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு: இதற்கு முன்னதாக, இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலஹாசனை இளமையாக காட்ட அந்த தொழில் தொழில்நுட்பத்தை வெற்றிமாறனும் விடுதலை 2 படத்தில் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 'விடுதலை' இரண்டாம் பாகம் மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X