Vetrimaaran: சினிமா பாடலை தனது கவிதை என பொய் சொன்ன வெற்றிமாறன்... அம்மா சொன்ன அந்த வார்த்தை!
கடலூர்: தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக வலம் வருகிறார் வெற்றிமாறன். தற்போது விடுதலை இரண்டாம் பாகம் எடுப்பதில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், விரைவில் வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சினிமா பாடல் ஒன்றை தனது கவிதை என பொய் சொல்லி ஏமாற்றியது குறித்து வெற்றிமாறன் மனம் திறந்துள்ளார்.
பொய் சொன்ன வெற்றிமாறன்
தனுஷ் நடித்த பொல்லாதவன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்தையே மாஸ்டர் பீஸ் சம்பவமாக செய்து காட்டிய வெற்றிமாறன், அடுத்தடுத்து இயக்கிய படங்களிலும் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என வெற்றிமாறன் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

விமர்சன ரீதியாகவும் வசூலிலும் வெற்றிமாறனின் படங்கள் தனி முத்திரை பதித்தன. தற்போது விடுதலை 2ம் பாகம் இயக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் விஜய்யின் தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டிலும் வெற்றிமாறனின் பெயர் தான் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், சிறு வயதில் தான் செய்த சீட்டிங் குறித்து மேடை ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார். கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன், சினிமாவில் ஆர்வம் வந்தது பற்றியும் தனது கிரியேட்டிவிட்டி குறித்தும் பேசினார். அதில் சின்ன வயதில் ஒரு சினிமா பாடலின் வரிகளை மாற்றிப் போட்டு, தான் எழுதிய கவிதை என அவரது அம்மாவிடம் காட்டினாராம்.
அதனைப் பார்த்த வெற்றிமாறனின் அம்மா, எதுவும் தெரியாதது போல காட்டிக்கொண்டதோடு, கவிதை நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார். மேலும் இந்த கவிதையை ஒரு நோட்டில் தேதி போட்டு எழுதி வைக்குமாறும், தொடர்ந்து இப்படி எழுதி வருமாறும் ஊக்கப்படுத்தியுள்ளார். இந்தத் தருணம் குறித்து பேசிய வெற்றிமாறன், தனது அம்மா அப்படி சொல்லவில்லை என்றால் சினிமா, கிரியேட்டிவிட்டி ஆகியவை மீது ஆர்வம் வந்திருக்காது எனக் கூறினார்.
மேலும் எனது அக்கா டாக்டர் என்பதால் நான் என்ஜினியரிங் முடித்தால் கூட போதும் என அப்பா நினைத்தார். எப்போதும் படிப்பதை மட்டுமே அதிகம் கமெண்ட்ஸ் வரும். ஆனால் எனக்கு படிப்பதைவிட சினிமாவில் தான் ஆர்வம் அதிகம் என்றும் கூறியுள்ளார். வெற்றிமாறனின் இந்த பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதேபோல் வெற்றிமாறனின் அடுத்தப் படம் தளபதி 69 அல்லது வாடிவாசல், இரண்டில் எது என தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











