Vetrimaaran: "செஞ்சுட்டா போச்சு... அஜித், தனுஷ் கன்ஃபார்ம்..” வெற்றிமாறன் கொடுத்த மெகா அப்டேட்
சென்னை: வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்கும் வெற்றிமாறன், அஜித், தனுஷ் கூட்டணி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் கொடுத்த மெகா அப்டேட்
தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி லீட் ரோலில் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்த மார்ச் மாதம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இதனால் விடுதலை 2ம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனாலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் பற்றிய தகவல்களும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

சூர்யா ஹீரோவாக நடிக்க வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தில் அமீர் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். இதனால் சூர்யா வாடிவாசலில் நடிப்பது சந்தேகமே என சொல்லப்படுகிறது. எனவே அஜித் வாடிவாசலில் இணைவார் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்றும், ஏகே 64ல் தான் அஜித் - வெற்றிமாறன் கூட்டணி இணையும் எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிவாசல் முடிந்ததும் அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெற்றிமாறன் கன்ஃபார்ம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் வெற்றிமாறன் இதுவரை நோ சொல்லவும் இல்லை.
இன்னொரு பக்கம் தனுஷின் வடசென்னை இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கெட்டு வந்தனர். ராஜனுக்குப் பின்னர் அன்பு எப்படி விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதே வடசென்னை படத்தின் ஒன்லைன் என்பதால், தனுஷ் ரசிகர்கள் எக்கச்சகமான எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் நல்ல செய்தி கூறியுள்ளார் வெற்றிமாறன். அதன்படி வாடிவாசல், ஏகே 64 முடிந்த பின்னர் வட சென்னை 2ம் பாகம் உருவாகவுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகினால் அதில் நடிக்கவுள்ளதாக பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதற்கு சான்ஸ் கிடையாது எனவும், வாடிவாசலில் சூர்யா நடிக்கவில்லை என்றால் இந்தப் படமே ட்ராப் ஆகும் என்று தான் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











