வெற்றிமாறனுக்கு 49, ஆர்த்திக்கு 50 வயதா?.. அழகான 2 குழந்தைகள்.. குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி தனது 50வது பிறந்தநாளை கடந்த வாரம் வெகு சிறப்பாக கொண்டாடிய நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.
தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இந்தியளவில் பல இயக்குநர்களையும் முன்னணி நடிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள் வரை தமிழில் ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினால் அவர்களின் முதல் தேர்வு வெற்றிமாறனாகத்தான் உள்ளது.

வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுவையான உணவை தயாரித்துக் கொடுத்தேன் என மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், வெற்றிமாறனின் குடும்ப புகைப்படங்களை ஐஸ்வர்யா போட்டோஸ் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர்களாக ஷங்கர், அட்லீ உள்ளிட்டவர்கள் இருக்க ஆக்ஷன் இயக்குநராக லோகேஷ் கனகராஜும் டார்க் காமெடி என்டர்டெயினராக நெல்சனும் மாஸ் காட்டி வருகின்றனர். ஆனால், ஓஜி இயக்குநராக வெற்றிமாறன் ரியல் சம்பவங்களை படமாக்கி மிகப்பெரிய சம்பவக்காரனாகவே தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் உயிர் இருக்கும், அரசியல் மற்றும் மக்களின் அடிப்படை வாழ்வு குறித்தவை அப்படியே யதார்த்த தொனியுடன் பிரதிபலித்து வருவதாலே அவரது படங்கள் தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுதலை 2: எனக்கு சூப்பர் ஸ்டார் இல்லை சூரியை கொடுத்தால் கூட அவரையும் சூப்பர் ஸ்டார் ஆக்கிக்காட்டுவேன் என வெற்றிமாறன் விடுதலை படத்தில் நிரூபித்துக் காட்டியிருப்பார். விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி உயிருடன் வாத்தியாராக நடித்ததை விட செத்த பிறகும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கலைப்புலி எஸ். தாணு பாராட்ட அதற்கு முழு சொந்தக்காரராகவும் இருப்பது வெற்றிமாறன் தான்.
வெற்றிமாறன் மனைவி பிறந்தநாள்: வெற்றிமாறனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் சில மாதங்கள் மட்டுமே வித்தியாசம். கடந்த வாரம் ஆர்த்தி 50வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக திரையுலக பிரபலங்கள் சூழ கொண்டாடினார். வரும் செப்டம்பர் 4ம் தேதி வந்தால் வெற்றிமாறன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுவார். இப்போதைக்கு வெற்றிமாறனுக்கு 49 வயதும் அவரது மனைவி ஆர்த்தி வெற்றிமாறனுக்கு 50 வயதும் ஆகின்றன.
2 குழந்தைகள்: ஆர்த்தி வெற்றிமாறனின் 50வது பிறந்தநாள் விழாவில் மாதம்பட்டி ரங்கராஜின் ருசியான உணவை சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ருசிக்க ருசிக்க சாப்பிட்டு வாழ்த்தினர். வெற்றிமாறன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு பூந்தென்றல் மற்றும் கதிரவன் என ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். லயோலா கல்லூரியில் படிக்கும் போது ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் வெற்றிமாறன். வெற்றிமாறன் மற்றும் ஆர்த்தி தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன. அடுத்து வரப்போகும் வாடிவாசல் திரைப்படம் மிகப்பெரிய படைப்பாக இருக்கும் என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











