வெற்றிமாறன் மனைவியா இவங்க?.. தாய்லாந்து பீச்சில் செம டான்ஸ் ஆடுறாங்களே.. காஸ்ட்யூமும் வேற லெவல்

சென்னை: இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். தற்போது சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து அரசன் படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். அவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் தாய்லாந்து பீச்சில் ஆர்த்தி நடனமாட வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறிய வெற்றிமாறன்; இரண்டாவது படத்திலேயே தேசிய அளவில் கவனம் ஈர்த்து. அவர் இயக்கிய ஆடுகளம் படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை 1, விடுதலை 2 ஆகிய படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன. எப்படியாவது வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்துவிடமாட்டோமா என்று பல நடிகர்கள் ஏங்குகிறார்கள்.

அரசன் வெற்றிமாறன்: கடைசியாக விடுதலை 2 படத்தை இயக்கிய அவர் இப்போது சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து அரசன் படத்தை இயக்கவிருக்கிறார். இதனை கலைப்புலி தாணு தயாரிக்க; அனிருத் இசையமைக்கிறார். வெற்றியும், சிம்புவு எப்போது இணைவார்கள் என்று பல வருடங்கள் எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். எனவே இப்படத்தின் அதீத ஹைப் எகிறியிருக்கிறது. பிரபல ரவுடி மயிலை சிவாவின் வாழ்க்கையை தழுவி இந்தப் படத்தை வெற்றி எடுப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

Vetrimaaran Wife Aarthi Thailand Beach Dance Goes Viral Fans Surprised
Photo Credit:

பெர்சனல் வாழ்க்கை: வெற்றிமாறனின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகளும், இளமாறன் என்ற மகனும் இருக்கிறார்கள். வெற்றியின் வாழ்க்கையில் ஆர்த்தி ரொம்பவே முக்கியமான இடத்தில் இருக்கிறார். இரண்டு பேரும் காதலித்துக்கொண்டிருந்தபோது வெற்றிக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் அவர் அவரது கனவை நோக்கி ஓடுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தி வாங்கி கொடுத்த பைக்: அதேபோல் வெற்றிமாறன் உதவி இயக்குநராக இருந்தபோது பணியாற்றிக்கொண்டிருந்த ஆர்த்தி தனது சம்பள பணத்தில் முதன்முறையாக பைக்கையும் வாங்கிக்கொடுத்தார். பைக் மட்டுமின்றி வெற்றிமாறன் பல பொருட்களை முதன்முறையாக பயன்படுத்தியதற்கு காரணம் ஆர்த்திதான். வெற்றிமாறன் சினிமாவில் இருப்பதால் அவருக்கு பெண் கொடுக்க முதலில் பெற்றோர் தயங்கினாலும்; குருநாதரான பாலுமகேந்திரா நேரில் சென்று பெர்சனலாக பேசி இரண்டு பேரின் திருமணம் நடப்பதற்கும் காரணமாக இருந்தார்.

தாய்லாந்தில் நடனம்: கேமராவிலிருந்து பெரும்பாலும் ஒதுங்கியிருக்கும் ஆர்த்தி அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதோடு சரி. இந்நிலையில் தனது மகள், மகனுடன் தாய்லாந்து சென்றிருக்கும் ஆர்த்தி அங்கிருக்கும் Phi Phi தீவில் இருக்கும் கடற்கரையில் ஜாலியாக நடனமாடி பொழுதை கழித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X