‘Bad Girl‘ படம் எப்படி இருக்கு?.. பிரபல சினிமா பத்திரிக்கையாளரின் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பரத்வாஜ் ரங்கன் படம் குறித்து விமர்சனத்தை கூறியுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கி உள்ளார். Bad Girl திரைப்படம் இந்த சமூகத்தால் அடக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதுக்குள் நம்மை ஆழமாக அழைத்துச் செல்லும் திரைப்படமாகும். படத்தின் நாயகியான அஞ்சலி சிவராமனை, சுற்றியே கதை நகர்கிறது. அஞ்சலி சிவராமன் ஒரு வித்தியாசமான பெண்ணாக நடித்துள்ளார். படம் அவளை பாவப்பட்ட பெண்ணாகவும் காட்டவில்லை, அவளுக்கான விளக்கங்களையும் அளிக்கவில்லை படம் அவளை ஒரு பெண்ணாக அப்படியே காட்டி உள்ளது.

Bad Girl Review
Photo Credit:

படத்தின் கதை : படத்தின் தலைப்பு தான் Bad Girl என்று இருக்கிறதே தவிர, படம் அவளை தவறான பெண் என்று சொல்லவில்லை. Bad Girl என்பது இந்த சமுதாயம் அவளின் முகத்தில் ரப்பரால் முத்திரையிட்டதை இந்த படம் காட்டி உள்ளது. படத்தின் ஒரு காட்சியில், ரம்யா ஒரு குடும்ப சடங்கில் கலந்துகொள்கிறாள். அப்போது ஒரு குழந்தையை அதன் தாயின் மடியில் தீ முன்னே அமர்த்து இருக்கிறாள். சூடு, புகை காரணமாக குழந்தை கதறி அழுகிறது. ஆனால் தாய் அமைதியாக எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள். ஒரு உறவினர் குழந்தை தூக்க குழந்தை நிம்மதியடைகிறது. சில நொடிகளில், உறவினர்கள் குழந்தையை மீண்டும் தீ முன்னே வைக்கிறார்கள். மீண்டும் குழந்தை கதறி அழுகிறது. இப்படித்தான் பலவிஷயங்கள் இந்த சமூதாயத்திற்காக நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் கட்டாயத்தால் நடக்கிறது என்பதை அழகாக காட்சி படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநருக்கு பாராட்டு: படத்தன் ஹீரோயினான ரம்யாவிற்கு மரபு முக்கியம், அடுத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது முக்கியம், என சொல்லி சொல்லி சிறுவயதில் இருந்தே திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். இந்த கட்டுப்பாடுகளை உடைத்தெறிவதில் ரம்யா மகிழ்ச்சி அடைகிறார். ஆண்களை பாலியல் பார்வையில் எப்படி காணலாம் என்பதை ஒரு பெண்ணின் கோணத்தில் படத்தின் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பரத்வாஜ் ரங்கன்: ரம்யா, தன் வகுப்புத் தோழன் நலனின் முகத்தில் வழியும் வியர்வைத்துளியால் கவரப்பட்டுவிடுகிறாள். ஒரு கட்டத்தில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ரம்யா, தன் தோழிகள் சிலர் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல நான் ஏன் இல்லை என யோசிக்கிறாள். தன் பெற்றோர், தன்னைப் பற்றிய விஷயங்களை தன் அனுமதி இல்லாமல் ஏன் மற்றவர்களிடம் பேசுகிறார்கள் என பல விஷயத்தை சொந்தமாக யோசிக்கும் பெண்ணாக இருக்கிறாள் ரம்யா. படம் தொடங்கும் போது, ரம்யா ஒரு சிறந்த வீட்டையும், ஒரு சிறந்த ஆணையும் அடைய கனவு காண்கிறாள். அது கிடைத்தா... கிடைக்க வில்லையா என்பது தான் பேட் கேர்ள் திரைப்படத்தின் கதை என பரத்வாஜ் ரங்கன் படத்தின் விமர்சனத்தை Galatta Plus யூடியுப் சேனலில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X