இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் உருவாகிவருகிறது. முதல் பாகம் பெற்ற வெற்றியை போலவே படத்தின் இரண்டாவது பாகமும் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், பேரரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். குறிப்பாக தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படம் பஞ்சமி நிலம் பற்றிய விவாதத்தை கிளப்பியது.

Vetrimaaran s video of giving to a perarasu video goes trending on social media

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை இயக்குகிறார் வெற்றிமாறன்.

கள்வன்: இந்தச் சூழலில் ஜிவி பிரகாஷ் கள்வன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் பாரதிராஜா, விஜய் டிவி புகழ் தீனா, இவானா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், பேரரசு, ஆர்.வி.உதயகுமார், சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பதிலடி கொடுத்த வெற்றிமாறன்: விழாவில் பேசிய பேரரசு, "யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானை வைத்து எடுக்கப்பட்ட படங்களான நல்ல நாள், அன்னை ஓர் ஆலயம், கும்கி போன்ற படங்கள் போன்று கள்வன் திரைப்படமும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்" என்றார். அதனையடுத்து பேசிய வெற்றிமாறன், 'யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால்தான் அந்தப் படம் ஓடும்' என்று தரமான பதிலடி கொடுத்தார்.

தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டங்கில் இருக்கிறது. பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து பிற்போக்குத்தனமாகவும், மூட நம்பிக்கையாகவும் கருத்து தெரிவித்த இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் மேடையில் வைத்தே தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X