சூரியை ஏமாத்திட்டாரா வெற்றிமாறன்?.. விஜய் சேதுபதி உள்ளே புகுந்து மொத்தத்தையும் மாற்றிவிட்டாரா?

சென்னை: விடுதலை 2 திரைப்படம் சூரி படமா? அல்லது விஜய் சேதுபதி படமா? யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற விவாதங்கள் ஒரு பக்கம் கிளம்பியிருந்தாலும் இது வெற்றிமாறன் படம் என்பது மட்டுமே ரசிகர்கள் மனங்களில் நிறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

விடுதலை முதல் பாகத்தில் சூரியை ஹைலைட் பண்ண வெற்றிமாறன் 2ம் பாகத்தில் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இருவரையுமே தான் சொல்ல வந்த சித்தாந்தத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் வெற்றிமாறன் என்று தான் சொல்ல வேண்டும்.

viduthalai 2 vetrimaaran vijay sethupathi 2

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அரசியல் படங்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான படங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மக்களின் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும் என்றும் நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும் என்கிற வரிகளை அழுத்தம் திருத்தமாக இந்த விடுதலை 2 படத்தில் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

சூரிக்கு ஸ்கோப் இல்லையா?: விடுதலை முதல் பாகத்தில் சூரியை ஹீரோவாக காட்டி படத்தை ஆரம்பித்து பெருமாள் வாத்தியாரை அவர் பிடிக்கும் காட்சிகள் என படம் ஃபயராக இருந்தது. அதுவரை காமெடியனாக பார்க்கப்பட்டு வந்த சூரியை ஹீரோவாக்கி கருடன், கொட்டுக்காளி என அவரது நடிப்பை ரசிகர்கள் ரசித்து வரும் நிலையில், விடுதலை 2 படத்தில் அவர் ஒரு கேமியோ நடிகர் போலவே மாற்றப்பட்டுள்ளாரே ஏன் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், மொத்த படத்தின் கதையையும் நரேட் செய்வது முதல் கடைசி கிளைமேக்ஸில் அவர் செய்யும் சம்பவம் என அவருக்கான இடத்தையும் வெற்றிமாறன் தர தவறவில்லை.

viduthalai 2 vetrimaaran vijay sethupathi 2

விஜய் சேதுபதி கெடுத்துட்டாரா?: வெறும் 4 நாட்கள் மட்டுமே விடுதலை படத்தில் நடிக்க வந்த விஜய் சேதுபதி முதல் பாகத்திலும் தனது ஆளுமையை செலுத்திய நிலையில், 2ம் பாகம் மொத்தத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். விஜய் சேதுபதி தான் உள்ளே புகுந்து சூரி ஹீரோவாக நடித்து வந்த படத்தைக் கெடுத்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் சேதுபதி மூலமாக மறைக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கையை மக்களுக்கு தெள்ளத் தெளிவாக அரசு மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அரசியல் உள்ளிட்டவற்றை சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

இது வெற்றிமாறன் படம்: பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வெற்றிமாறன் ஆடுகளம் படத்தை இயக்கி தேசிய விருது வென்றார். வடசென்னை படத்தை எடுத்தவர் சமூக பிரச்சனைகளையும் அரசியல் சூழல்களையும் தனது படைப்புகளால் சொல்லியே ஆக வேண்டும் என விசாரணை, அசுரன், விடுதலை 1 மற்றும் 2 என வரிசையாக அரசியல் மற்றும் சித்தாந்த இயக்குநராகவே மாறியுள்ளார். படிச்சி பார்த்தேன் ஏறவில்லை, எங்கேயும் எப்போதும் போன்ற பாடல்களையோ ஜாலியான கமர்ஷியல் ஹீரோவையோ இனிமேல் வெற்றிமாறனிடம் இருந்து ரசிகர்களே எதிர்பார்க்க மாட்டார்கள். அடுத்து வாடிவாசல் பேசப்பொகும் அரசியலையும் தாக்கத்தையும் திரையில் காண மட்டுமே ரசிகர்கள் காத்திருப்பார்கள் எனத் தெரிகிறது.

viduthalai 2 vetrimaaran vijay sethupathi 2

ஏகப்பட்ட குறியீடுகள்: விடுதலை 2 படம் முழுக்க ஏகப்பட்ட குறியீடுகளை புதைத்து வைத்து இது பழைய கதையெல்லாம் இல்லை. இன்றும் இப்படித்தான் அரசியல்வாதிகளும் அதிகாரமும் மக்கள் மீது பண்ணையார்த்தனம் செய்கிறது என்பதை கற்பனை கதை என்கிற போர்வையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். அந்த 5 பேரை காப்பாற்றுவாயா? அல்லது ஒருவர் மீது வண்டி ஏற்றிக் கொல்வாயா? என்கிற ஜீப் கதையில் மொத்த அரசியலையும் அடக்கிய விதம் அட்டகாசம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X