Vetrimaaran - வெற்றிமாறன் சிகரெட்டை விட்ட சீக்ரெட் இதுதான்.. மனைவி ஆர்த்தி பகிர்ந்த விஷயம்
சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) வெற்றிமாறன் சிகரெட்டை விட்ட சீக்ரெட் குறித்து அவரது மனைவி ஆர்த்தி பேசியிருக்கிறார்.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிஅய் விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.
விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே அசுரன் படத்தில் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
சிகரெட் விட்ட சீக்ரெட்: வெற்றிமாறன் பயங்கரமான சிகரெட் அடிக்ட்டாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் ஒருகட்டத்தில் அவர் சிகரெட்டை விட்டுவிட்டார். இந்தச் சூழலில் அவர் சிகரெட்டை விட்டது குறித்து அவரது மனைவி ஆர்த்தி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனது கணவர் எடுத்த கடினமான முடிவுகளிலேயே ஒன்று என்றால் அது சிகரெட்டை விடுவதுதான். தொடர்ந்து சிகரெட் அடித்துக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதுப் ஓல் இருப்பதாக சொன்னார்.
ஆஞ்சியோ: உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆஞ்சியோ செய்தோம். அப்போது மருத்துவர்கள் நீங்கள் புகைப்பிடிப்பதை விட்டே ஆக வேண்டும் என சொன்னார். ஆனால் மருத்துவமனையிலிருந்து செல்லும் வழியிலேயே காரை நிறுத்த சொல்லி ஒரு சிகரெட் வாங்கி பிடித்தார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நானும் அப்போது புகைப்படிப்பதை நிறுத்துங்கள் என வற்புறுத்தவில்லை.
கனவை அடைய வேண்டும்: ஏனென்றால் நீ சிகரெட் அடித்தால் நான் பேசமாட்டேன் என சொன்னால் அது வேலைக்கே ஆகாது. அவராகவே போகப்போக நாம் நன்றாக இருந்தால்தான் தன்னுடைய கனவை நிறைவேற்ற முடியும் என புரிந்துகொண்டார். சில படங்கள பார்த்தும் அதை எல்லாம் விட்டார். சிகரெட் விட்ட நாளை அவர் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











