கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் வெற்றிமாறன் சுவாரசியமான பேட்டி!
சென்னை: இந்திய சினிமாவில் முன்னனி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். சிறந்த இயக்குனருக்கான பல விருதுகளை அள்ளியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற வேற லெவல் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடனான ஆன்லைன் நேர்காணலில் வெற்றிமாறன் அளித்த பேட்டி யூ டியூபில் வைரலாகி வருகிறது.

பிஸியான இயக்குனர்
சூரி நாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் வாடிவாசல், மீண்டும் தனுஷ் உடன் 5வது முறை கூட்டணி, இதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் ஒரு படம் என வரிசையாக படங்கள் உள்ளதால் மிகவும் பிஸியாக உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

வெப் தொடர்
சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் வடசென்னை படத்தின் 2ம் பாகத்தை வெப் தொடராக இயக்க உள்ளதாக கூறி எதிர்பார்ப்பை கிளப்பினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பேட்டியிலும் அதனை உறுதி படுத்தியுள்ளார்.

வடசென்னைக்கு முன்பு
இதுமட்டுமின்றி அந்த பேட்டியில் வடசென்னை படத்திற்கு Prequel ஆக ராஜன் வகையறா என்ற கதையை படமாக எடுக்க யோசனை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த கதை வடசென்னை படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் அல்லாமல் முழுக்க முழுக்க ராஜன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு புது நடிகர்களை வைத்து எடுக்கவிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு
வடசென்னை படத்தில் பல விஷயங்கள் பாராட்டை பெற்றாலும் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவர் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தது. படத்தின் நீளத்தை குறைக்க வேறு வழியின்றி ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன்பு தான் வாய்ஸ் ஓவர் பணிகளை செய்து முடித்ததாக கூறி வியக்க வைத்துள்ளார் வெற்றிமாறன்.


Click it and Unblock the Notifications











