வெற்றிமாறன் என்ன ரொம்ப கம்பெல் பண்ணாரு.. நடிகை மீனாள் !

சென்னை : வெற்றிமாறன் இப்பொழுது இந்திய அளவில் அனைவரும் உற்று நோக்கும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளது

இந்த நிலையில் நடிகை மீனாள் வெற்றிமாறன் என்ன ரொம்ப கம்பெல் பண்ணாரு அந்த படத்தில் நடிக்க வைக்க என தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்

 ரொம்பவே ஸ்பெஷல்.

ரொம்பவே ஸ்பெஷல்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான மற்றும் சிறந்த இயக்குனராக உள்ளவர் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறனுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது பொல்லாதவன் வெற்றியை தொடர்ந்து தனுஷ் உடன் இன்று வரை பயணித்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கியிருந்தார்.தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். அசுரன் வெற்றிக்குப் பிறகு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் படங்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 ஜல்லிக்கட்டு விளையாட்டை

ஜல்லிக்கட்டு விளையாட்டை

பொல்லாதவன்,ஆடுகளம், வடச்சென்னை, அசுரன்என தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி தொடர்ந்து நான்கு வெற்றி படங்களை கொடுத்து இருக்க அடுத்ததாக 5 வது முறையாக மீண்டும் இணைய உள்ளனர் . வெற்றிமாறன் இப்போது சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

 ஆடுகளம்

ஆடுகளம்

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான இரண்டாவது திரைப்படம் ஆடுகளம். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய இந்த படம் மதுரையை சுற்றி சேவல் நடக்கும் சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் பேட்டைக்காரனாக நடித்த ஜெயபாலன் நடித்திருப்பார். அவருக்கு மனைவியாக மீனாள் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

 வெற்றிமாறன் என்ன ரொம்ப கம்பெல் பண்ணாரு

வெற்றிமாறன் என்ன ரொம்ப கம்பெல் பண்ணாரு

பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மீனாள் ஆடுகளம் படத்தில் முழுநீள முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருப்பார் . இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை மீனாள் இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் என்னை கம்பெல் பண்ணி தான் நடிக்க வைத்தார். என் கதாபாத்திரத்தை பற்றி வெற்றிமாறன் கூறியவுடன் நான் முடியவே முடியாது என்று சொன்னேன் பிறகு முழு கதையையும் கூறிய பிறகு நடிக்க சம்மதித்தேன் என நடிகை மீனாள் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X