தேசிய விருது இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் நடிகர்!
சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
நமது தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் - திடீர் என்று ஹீரோ அவதாரம் எடுப்பார்கள், அப்படி ஹீரோவாக வெற்றி பெட்ற நாகேஷ் முதல் யோகிபாபு வரை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் . இன்னும் சொல்ல போனால் அப்புக்குட்டி என்ற காமெடி நடிகர் ஹீரோவாக நடித்து நேஷனல் அவார்ட் வாங்கியது யாராலும் மறக்க முடியாது.

அந்த வரிசையில் பல பேர் பல தடவை சூரியிடம் ஹீரோவாக நடிக்க கேட்டனர். அப்பொழுதுயெல்லாம் தவிர்த்து வந்த சூரி இப்போது கேட்பது பெரிய இயக்குனர் என்பதினால் ஒப்புக்கொண்டார். தேசிய விருது என்றாலே நினைவில் வரும் ஒரு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
முன் மிக பெரிய ஜாம்பவானின் சிஷியர்,இப்போதோ விருதுகள் குவிக்கும் கிடங்கு.ஒன்றா இரண்டா பட்டியலிட விருதுகள் பல அதுவும் ஒரே படத்திற்காக ஆறு விருதுகள்!!!கேட்பதற்கு கற்பனை கதை போல இருந்தாலும் அவரின் கற்பனை கதைக்கு தான் இத்தனை விருதுகள்.முதல் படத்திலேயே தான் ஒரு பொல்லாத இயக்குனர் என்பதை நிரூபித்தவர். இரண்டாம் படைப்போ கண்கட்டும் அளவிற்கு விருதுகள் குவிக்க கை கொள்ளவில்லை, காரணம் விருதுகள் ஆறு.
மூன்றாவது மற்றும் ஒரு பெருமை அதற்கும் மூன்று விருதுகளோடு ஆஸ்கார் விருத்திற்கும் பரிந்துரைக்க பட்டது.
இப்படி தமிழ் சினிமாவிக்கு பல்வேறு விருதுகள் வாங்கி கொடுத்த இயக்குனர் திரு.வெற்றிமாறன் இப்பொது தனுஷ் நடிப்பில் "அசுரன்"அவதரிக்க தயாராக உள்ளது. இதற்கு அடுத்த திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை நடிகரை முக்கிய கதாபாத்திரத்தில் இயக்க உள்ளார்.பரோட்டா சூரி அவர்கள் தான் அந்த அதிஷ்டகாரர்.தன் இயல்பான நடிப்பாலும் மண்மணம் மாறாத பேச்சாலும் அனைவரையும் கவர்ந்த நடிகர் இப்பொது மற்றும் ஒரு பரிமாணத்தில்...
ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் இந்த படத்தை தயாரிக்க திட்டம் தீட்டி உள்ளது , ஜி வி பிரகாஷ் இசை அமைக்க இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஷூட்டிங் ஸ்டார்ட் செய்ய படும் என்று எதிர் பார்க்க படுகிறது .மதுரையையை மையமாக கொண்ட படமாகவும் மதுரை கிராமங்களின் வட்டார வழக்கை அடிப்படையாக கொண்டு சூரியின் கதாபாத்திரம் அமையும் என்பது மேலும் ஒரு சிறப்பு தகவல்.


Click it and Unblock the Notifications











