சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்.. உருவாகும் மாஸ் கூட்டணி!

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது

தொடர்ந்து தனுஷுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அசுரன் என்ற படத்தை இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று வருகிறார்

இப்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை என்ற படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வயதான கதாபாத்திரத்தில்

வயதான கதாபாத்திரத்தில்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். ஆரம்பம் முதலே தனுஷுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரின் பல படங்களில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை என மாஸ் காட்டி வெற்றிகளை கொடுத்த தனுஷ் வெற்றிமாறன் காம்போ நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் அசுரன். இதில் தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

சூரி ஹீரோவாக அறிமுகம்

சூரி ஹீரோவாக அறிமுகம்

வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுவரை காமெடியனாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சூரி விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் நிறைவேற்றி வரும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் சூரி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் வாடிவாசல்

சூர்யாவின் வாடிவாசல்

விடுதலையை முடித்த கையோடு அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் வெற்றி மாறன் இயக்குகிறார். விடுதலை மற்றும் வாடிவாசல் என இரண்டு படங்களும் பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் படம் ஆகும். இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் இணைவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் தற்போது அட்டகாசமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் வெற்றிமாறன் கூட்டணி

ரஜினிகாந்த் வெற்றிமாறன் கூட்டணி

அண்ணாத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. கலைபுலி எஸ் தாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் இப்படமும் பிரபல நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X