வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு!
சென்னை : நடிகர் சிலம்பரசன் இப்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் மாஸான வெற்றி பெற்ற மஃப்டி தமிழ் ரீமேக் பத்து தல -யில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

பழைய துடிப்புடன்
சில காலமாகவே திரைப்படங்களில் சரியாக நடப்பதில்லை நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வருவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நடிகர் சிம்பு இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதன் காரணமாக உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் பழைய துடிப்புடன் நடிப்பை வெளிக் காட்டி நடனத்திலும் பட்டைய கிளப்பி இருந்ததை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அரசியல் திரில்லர்
இனி சொல்வதற்கு எதுவும் இல்லை எல்லாம் செயல்தான் என சொன்னது போலவே கைவசம் அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் நீண்ட காலமாக படப்பிடிப்பு இழுபறியில் இருந்த மாநாடு தற்போது முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய வர சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். அரசியல் திரில்லர் நிறைந்த திரைப்படமாக இது உருவாகி வருகிறது. எஸ் ஜே சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

கேங்ஸ்டர் டானாக
கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மஃப்டி தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சிம்பு முதல் முறையாக கேங்ஸ்டர் டானாக நடிக்க உள்ளார். சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

தலா ஒரு திரைப்படம்
மாநாடு மற்றும் பத்து தல ஆகிய படங்களை முடித்த கையோடு மூன்றாவது முறையாக கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற உள்ள படத்திற்கு "நதிகளிலே நீராடும் சூரியன்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்து சுசீந்திரன் மற்றும் ராம் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு திரைப்படம் நடிக்க உள்ளார்.

ஷூட்டிங்கை தொடங்க உள்ளார்
இவ்வாறு ஃபுல் ஃபார்மில் இறங்கியிருக்கும் சிம்பு தொடர் வெற்றிகளைக் கொடுத்து இந்திய அளவில் பிரபலமாக உள்ள இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இப்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளார். இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு சிம்பு பட பணிகளை தொடங்க உள்ளார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











