வட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்!
Recommended Video

சென்னை: வட சென்னை திரைப்படத்திற்குப் பிறகும் மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி தொடர உள்ளது.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் வட சென்னை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் கதையை வெற்றிமாறன் படமாக்க உள்ளார். இரண்டு கதாபாத்திரங்கள் கதை முழுதும் பயணிக்கும் நாவல் "வெக்கை".
ஒரு பதினைந்து வயது சிறுவன், நாவலின் தொடக்கத்திலேயே ஒருவரை கொடூரமாக கொலை செய்கிறான். அந்த கொலையை அவனுடைய தந்தையோ, தாயோ, மாமாவோ அதை குற்றமாகக் கருதவில்லை. குற்றமாக நினைக்காததற்கான காரணம் பிறகு நாவலில் விரியும். கொலை செய்ததனால் கதை முழுக்க சிறுவனும், தந்தையும் ஓடி ஒளிந்துகொண்டே இருக்கிறார்கள். ஓடி ஒளிவதைத் தாண்டி படிப்பவர்களுக்கு தந்தை மகன் உறவில் இருக்கும் அன்பு மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இதில் தனுஷ் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரம் யார் எனத் தெரியவில்லை. வெற்றிமாறன் ஒரு நாவல்டி இயக்குனர் என்பதால் இக்கதையின் சாரத்தை உணர்ந்து சொல்லவரும் கருத்தை பிசகாமால் எடுப்பார் என நம்பலாம்.
வட சென்னை இரண்டாம் பாகம் வருவதற்கு முன்பே இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான போட்டோ ஷூட் இம்மாத இறுதியில் நடக்க உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











