கதை நாயகன் சூரி.. கதாநாயகன் விஜய்சேதுபதி.. ’விடுதலை’ உலகு பற்றி மனம் திறந்த வெற்றிமாறன்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை.

இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாக உள்ளதாகவும் முதல் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், விடுதலை படத்தின் வித்தியாசமான உலகத்தை பற்றி வெற்றிமாறன் மனம் திறந்து அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

வெற்றிமாறனின் விடுதலை

வெற்றிமாறனின் விடுதலை

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என இயக்குநர் வெற்றிமாறன் இயக்கினாலே அந்த படத்திற்கு விருதுகளை ரெடி பண்ணி வைங்கப்பா என்பது போலவே தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் இயக்கத்தில் அடுத்து விடுதலை படம் உருவாகி வருகிறது.

கதையின் நாயகன் சூரி

கதையின் நாயகன் சூரி

என்.எஸ். கிருஷ்ணன், நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, குக் வித் கோமாளி வரை பல காமெடி நடிகர்கள் ஹீரோவான நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக போகிறார் சூரி என்கிற அறிவிப்பு வெளியானதில் இருந்து விடுதலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. இந்நிலையில், இந்த படத்தின் கதையின் நாயகனே சூரி தான் வெற்றிமாறன் மனம் திறந்து கூறியுள்ளார்.

கதாநாயகன்

கதாநாயகன்

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கேமியோவாக விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர், விஜய்சேதுபதிக்கு படத்தில் முக்கிய ரோல் என்றனர். ஆனால், தற்போது விடுதலை படத்தின் கதாநாயகனே விஜய்சேதுபதி தான் என இயக்குநர் வெற்றிமாறனே வெளிப்படையாக கூறியுள்ளார்.

வாத்தியார்

வாத்தியார்

விஜய்யின் மாஸ்டர், தனுஷின் வாத்தி, விக்ரமின் கோப்ரா என தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வாத்தியார்கள் கதாபாத்திரங்கள் முளைத்து வருகின்றன. இந்நிலையில், வெற்றிமாறனின் விடுதலை படத்திலும் விஜய்சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் என்பதையும் வெற்றிமாறன் ரிவீல் செய்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக கெளதம் மேனன்

போலீஸ் அதிகாரியாக கெளதம் மேனன்

இயக்குநர் கெளதம் மேனன் நடித்தாலே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி விடும். சமீபத்தில் வெளியான சீதா ராமம் படத்திலும் கெளதம் மேனன் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில், வெற்றிமாறனின் விடுதலை படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவரது எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள நிலையில், விடுதலை படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் எப்போ

வாடிவாசல் எப்போ

விடுதலை படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாகவே முடிந்து விடும் என்றும், சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சூர்யா 42 ஷூட்டிங் பிகின்ஸ் என சூர்யா போட்டது போல வாடிவாசல் பிகின்ஸ் என எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றே ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X