தனது படத்தில் விஜய் சேதுபதிக்கும் சூரிக்கும் என்ன கேரக்டர்? மனம் திறந்த இயக்குநர் வெற்றிமாறன்!
சென்னை: தான் இயக்கி வரும் படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு என்ன கேரக்டர் என்பது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றி மாறன்.
தற்போது சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

துணைவன் சிறுகதை
இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

புதிய ஸ்டுடியோ
ரெக்கார்டிங் பணிகளை இளையராஜா நேற்று முதல் தொடங்கிவிட்டார். பிரசாத் ஸ்டுடியோவுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய இளையராஜா, தியாகராய நகரில் உள்ள எம்எம் தியேட்டரை தனது ஸ்டுடியோவாக மாற்றி ரெக்கார்டிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

மனம் திறந்த வெற்றிமாறன்
அந்த போட்டோக்களை சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான கேரக்டர்கள் குறித்து மனம் திறந்துள்ளார் படத்தின் இயக்குநரான வெற்றிமாறன்.

கதையின் ஹீரோ
அதன்படி கதையின் ஹீரோ சூரி என்றும் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியுள்ளார் வெற்றிமாறன். மேலும் சூரி கதையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பார் என்றும், விஜய் சேதுபதி ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறியுள்ளார்.

சூரிக்கு அப்பா
இதனிடையே படத்தில் சூரி போலீஸ் அதிகாரி என்றும் விஜய் சேதுபதி சூரிக்கு அப்பாவாக நடிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடி வாசல் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











