சூரி ஹீரோவாகும் படம்... மொத்த ஷூட்டிங்கும் வெளிநாட்டுல... அடுத்த மாதம் செல்கிறது வெற்றிமாறன் டீம்

By

Recommended Video

நா. முத்துக்குமார் எழுதிய கவிதை.. படமாக எடுக்கும் வெற்றிமாறன் | Vetrimaaran direct Actor Soori

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முழுக்க வெளிநாட்டில் நடக்க இருக்கிறது.

தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே அருணாச்சலம், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அசுரன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசை அமைத்திருந்தார்.

இதன் கதை, எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் நூறாவது நாளை எட்டியது.

 வெற்றி விழா

வெற்றி விழா

வெற்றி விழா, சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் நேற்று நடந்தது. இதில் வெற்றிமாறன், தனுஷ், தயாரிப்பாளர் தாணு உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஷீல்டு வழங்கப்பட்டது.

 சூரி நடிக்கும் படம்

சூரி நடிக்கும் படம்

இதை அடுத்து சூரி நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தை தனது ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, விண்ணைத்தாண்டி வருவாயா?, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உட்பட சில படங்களை தயாரித்துள்ளார்.

 வெளிநாடு

வெளிநாடு

இந்தப் படத்தின் கதை, பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதையில் இருந்து உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது. இதன் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் நடக்க உள்ளது. அநேகமாக துபாயாக இருக்கும் என்று தெரிகிறது.

 அடுத்த மாதம்

அடுத்த மாதம்

ஷூட்டிங், அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு இப்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 வாடிவாசல்

வாடிவாசல்

இதை அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இது ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X