முதலில் சூரி புராஜெக்ட்.. முழு வீச்சில் வெற்றிமாறன்.. அடுத்து சூர்யாவின் வாடிவாசல்!
சென்னை: இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சத்யமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது.
Recommended Video
இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர், இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தை முடித்த உடன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

படப்பிடிப்பு தொடக்கம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். தான் துப்பாக்கியுடன் உள்ள புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று சூர்யா பதிவிட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இறுதிக்கட்ட பணிகள்
வெற்றிமாறன் - சூரி இணையும் படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். இளையராஜா இசையமைப்பது மட்டுமே அதிர்காரப்பூர்வ அறிவிப்பாக உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் ஓரிரு மாதங்களில் முடியவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வைரலான வீடியோ
வாடிவாசல் படத்திற்காக சூர்யாவின் லுக் டெஸ்டிங் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. சூர்யா காளைமாட்டுடன் உள்ள வீடியோ பல ரசிகர்களால் இணையத்தில் பகிறப்பட்டு வைரலானது. சூர்யாவின் லுக்கும் ரசிகர்களை கவர்ந்தது.

விரைவில் படப்பிடிப்பு
சூரி படத்தின் பணிகள் முடிந்த கையோடு வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். 1000 முதல் 1500 பேர் வரை படப்பிடிப்பு தளத்தில் இருக்கவேண்டும் என்பதால் சரியான திட்டத்துடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கேரியர் பெஸ்ட் படமாக வாடிவாசல் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் இடையில் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











