பெரிய உதவி.. மாரி செல்வராஜுக்கு அசுரன் படத்தில் நன்றி சொன்ன வெற்றிமாறன்.. இதுதான் காரணம்!

அசுரன் படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended Video

தனுஷ் ரொம்ப மெனக்கெடுவார்- வெற்றிமாறன் | Asuran | Vetrimaaran | Dhanush

சென்னை: அசுரன் படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நன்றி தெரிவித்துள்ளார்.

அசுரன் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷுக்கு இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக மாறியுள்ளது.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அசுரன். இந்த நாவலின் கதையில் சில மாற்றங்களை செய்து, வெற்றிமாறன் இதை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

நன்றி

நன்றி

இந்த படத்தின் எண்ட் கார்டில் மாரி செல்வராஜுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நன்றி சொல்லி இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குனர் ப.ரஞ்சித்தின் நெருங்கிய நண்பர். இவரும் கடந்த வருடம் ஜாதிய ஒடுக்குமுறை குறித்து பரியேறும் பெருமாள் படம் எடுத்தார்.

வசனம்

வசனம்

இந்த நிலையில் அசுரன் படத்தில் வசனம் தொடர்பான உதவிகளை வெற்றிமாறனுக்கு மாரி செய்துள்ளார். திருநெல்வேலியில் நடக்கும் கதை என்பதால் அது தொடர்பான உதவிகளை வெற்றிமாறனுக்கு மாரி செய்துள்ளார். இது படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆனது.

என்ன நாய்

என்ன நாய்

அதேபோல் பரியேறும் பெருமாள் படத்தில் இருப்பது போலவே இந்த படத்திலும் வேட்டை நாய்களை பயன்படுத்தி இருப்பார்கள். இது தொடர்பான பரிந்துரைகளையும் மாரி செல்வராஜ் வெற்றிமாறனுக்கு அளித்துள்ளார். இது இல்லாமல் இன்னொரு முக்கிய உதவியை அவர் வெற்றிமாறனுக்கு செய்துள்ளார்.

கதை

கதை

அசுரன் படத்தில் கடைசியில் சில வசனங்கள் சேர்க்க வேண்டிய நிலை. ஆனால் தனுஷ் லண்டனில் மாரி செல்வராஜ் பட ஷூட்டிங்கில் இருந்தார். இதனால் மாரி செல்வராஜ் தனுஷை அங்கிருக்கும் ரெக்கார்டிங் தியேட்டரில் பேச வைத்து ஆடியோவை மெயில் செய்துள்ளார்.

வசனம்

வசனம்

இதைத்தான் கடைசி நேரத்தில் படத்தில் வசனமாக சேர்த்து இருக்கிறார்கள். இப்படி வெற்றிமாறனுக்கு நிறைய உதவிகளை மாரி செல்வராஜ் செய்துள்ளார். இதனால்தான் அவருக்கு வெற்றிமாறன் படத்தில் நன்றி தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X