சிம்பு படத்தில் நடிகராக அறிமுகமாகிறாரா பிரபல இயக்குனர்!?

சென்னை: இந்திய சினிமாவில் முன்னனி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். சிறந்த இயக்குனருக்கான பல விருதுகளை அள்ளியுள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற வேற லெவல் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் கூடிய விரைவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி வெகுவாக பரவி வருகிறது.

பிஸியாக இயக்குனர்

பிஸியாக இயக்குனர்

சூரி நாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் வாடிவாசல், மீண்டும் தனுஷ் உடன் 5வது முறை கூட்டணி, இதனிடையே தளபதி விஜயுடன் ஒரு படம் என வரிசையாக படங்கள் உள்ளதால் மிகவும் பிஸியாக உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

வெப் தொடர்

வெப் தொடர்

சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் வடசென்னை படத்தின் 2ம் பாகத்தை வெப் தொடராக இயக்க உள்ளதாக கூறி எதிர்பார்ப்பை கிளப்பினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பெருவாரியான ரசிகர்கள் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்பாராத வகையில்

எதிர்பாராத வகையில்

இந்நிலையில் வெற்றிமாறன் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் மிஷ்கின் வெற்றிமாறனை தனது படத்தில் நடிக்க வைக்க ஆசை என முன்னர் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் வெற்றிமாறன் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

சிம்புவுடன் இணைந்து

சிம்புவுடன் இணைந்து

கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தான் வெற்றிமாறன் சிம்புவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் இந்த தகவலின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X