நா. முத்துக்குமார் எழுதிய கவிதை.. படமாக எடுக்கும் வெற்றிமாறன்.. ஹீரோ சூரி.. இதுதான் காரணம்!
நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் படமெடுத்து வருகிறார்.
Recommended Video
சென்னை: நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் படமெடுக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணை மீண்டும் ஒன்றாக சேர்ந்து பெரிய ஹிட் கொடுத்து உள்ளது. அசுரன் படம் ஹிட் வெற்றிமாறனுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த நிலையில் அசுரன் படத்துக்கு பின் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் மீண்டும் இணைந்து வடசென்னை 2 படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வடசென்னை 2
வடசென்னை 1 படம் வெற்றிபெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்க போகிறார் என்று தகவல் வந்தது. இதற்கு இடையில் ஒரு படம் எடுக்கலாம் என்று அசுரன் எடுப்பதாக செய்திகள் வெளியானது. அதேபோல் தற்போது அசுரன் படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.

ஆனால் என்ன
ஆனால் தற்போது வடசென்னை 2 படத்தை மேலும் 8 மாதங்களுக்கு தள்ளி வைக்க இருக்கிறார் வெற்றிமாறன். ஆம் அதற்கு முன் நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் படமெடுக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

என்ன கதை
பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பு பெரிய அளவில் பிரபலமானது. இதில் இறந்து போன முதியவர் ஒருவரின் இறுதிச்சடங்கு குறித்த கவிதை ஒன்று இருக்கும். அதை அடிப்படையாக வைத்து இந்த கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

எப்படி நடக்கும்
இதில் மகன் பாத்திரத்தில் சூரி நடிக்க உள்ளார் என்று கூறுகிறார்கள். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்தை விருது விழாக்களுக்கு அனுப்பும் வகையில் எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

செம கதை
பாடல், ஹீரோயிசம் இல்லாமல் படம் வெளியாக உள்ளது. அதேபோல் படத்தில் ஹீரோயின் கிடையாது என்றும் கூறுகிறார்கள். மலையாளத்தில் இதேபோல் இ மா யூ என்ற படம் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











