அசுரன் படத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்-மஞ்சு வாரியர்

Recommended Video

Asuran - உயிரை பணயம் வச்சு காட்சிகளை பண்ணாங்க! | Asuran Audio Lanch

சென்னை: அசுரன் படத்திற்காக வெற்றிமாறனிடம் இருந்து அழைப்பு வந்தவுடன், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். இயக்குநர் வெற்றிமாறன், எனக்கு தகுந்தாற் போல் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் நடிக்க வைத்தார். எனக்கு அசுரன் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையான மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்றார் நடிகை மஞ்சு வாரியர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் அசுரன். இதில் தனுஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகியான மஞ்சு வாரியார். இப்படத்தில் பச்சையம்மாளாகவே வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர்.

Vetrimaran was as simple and sweet as I deserved - Manju Warrior

மஞ்சு வாரியார் அசுரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசுகையில், இதுவரையில் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளேன். தமிழ் சினிமாவில் நடிக்கவும் எனக்கு பல வாய்ப்புகள் வந்த போதும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.

அசுரன் படத்திற்காக வெற்றிமாறனிடம் இருந்து அழைப்பு வந்தவுடன், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். வெற்றிமாறன் இயக்கிய படங்களை நானும் பார்த்து வியந்திருக்கிறேன். மிகவும் சீரியஸ் மற்றும் ஆழமான கதைக்களம் கொண்ட படங்களாக இருக்கும்.

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் நடிக்கும் வாய்ப்பை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். என்னால் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. இதை நன்கு உணர்ந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், எனக்கு தகுந்தாற் போல் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் நடிக்க வைத்தார்.

எனக்கு அசுரன் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையான மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்றார் அசுரன் படத்தில் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த நாயகி மஞ்சு வாரியர். மஞ்சு வாரியாரின் திறமைக்கு அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X