twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யூ தமிழன்ஸ்.. இந்தி தெரியாததால் இயக்குனர் வெற்றிமாறனை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்திய அதிகாரி!

    By
    |

    சென்னை: இந்தி தெரியாததால், விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Prakash Raj Farm House Life • Vedant, Pony Prakash Raj

    பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்பட பல படங்களை இயக்கியவர் வெற்றி மாறன்.

    இப்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல், சூரி நடிக்கும் படங்களை இயக்க இருக்கிறார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

     மக்கள் திலகத்தின் மறு உருவமே.. பரபரக்கும் அரசியல் போஸ்டர்கள்.. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்? மக்கள் திலகத்தின் மறு உருவமே.. பரபரக்கும் அரசியல் போஸ்டர்கள்.. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்?

    விமான நிலையம்

    விமான நிலையம்

    இதற்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறியுள்ளார். கனிமொழி எம்பிக்கு விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பைச் சுட்டிக்காட்டி, தனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருப்பதாக வெற்றிமாறன் நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தி தெரியாது

    இந்தி தெரியாது

    அவர் அதில் கூறி இருப்பதாவது: 2011 ஆகஸ்ட் மாதம் ஆடுகளம் படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் திரையிட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ஸாரி, எனக்கு இந்தி தெரியாதுன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?ன்னு கேட்டார்.

    என்னோட தாய்மொழி

    என்னோட தாய்மொழி

    நான், என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, நீங்களாம் இப்படித்தான். யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி. நீங்களாம் தீவிரவாதிகள்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிற்க வச்சிட்டார்.

    ஜி.வி.பிரகாஷ்குமார்

    ஜி.வி.பிரகாஷ்குமார்

    நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றோம். இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கார்னு என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், ஜி.வி.பிரகாஷ்குமாரும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க.

    பண்பாட்டை காப்பாத்தணும்

    பண்பாட்டை காப்பாத்தணும்

    என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது என்று கூறியுள்ளார்.

    English summary
    Director Vetrimaran was stopped at the Delhi airport for not knowing Hindi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X