அந்த வசனம் அவருக்கானது? விடுதலை 2வில் சீமான் மட்டும் நடித்து இருந்தா? அந்தணன் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென், இளவரசு, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் என பலர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை 2. இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வலைப்பேச்சு அந்தணன் படம் குறித்து தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், விடுதலை 2 திரைப்படம் இந்த காலகட்டத்திற்கும் அடுத்த வரும் தலைமுறைக்கு நல்ல திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற கருத்துக்களை எந்த இளைஞர்களும் படிப்பதில்லை. ஆனால் அதை திரைப்படமாக கொடுக்கும் போது அது காலத்திற்கும் அழியாத ஒரு திரைப்படமாக இருக்கும், அப்படி ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன், எந்த படத்தை எடுப்பதில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளவில்லை. அவர் நினைத்திருந்தால், இந்த கதையை வேறு மாதிரி கமர்சியல் திரைப்படமாக மாற்றி இருக்கலாம், ஆனால் அந்த தாக்கத்தை அப்படியே திரையில் காட்டி இருக்கிறார் வெற்றிமாறன்.

விடுதலை 2: இந்த படத்தில் விஜய் சேதுபதி போல ஒரு நடிகர் நடிக்கவில்லை என்றால், இந்த படமே எடுபட்டு இருந்திருக்காது. இந்த படத்தில் பிணமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கே திக் என்று இருந்தது, நடிப்பது என்பது வேறு ஆனால், இறந்த பின்பு பிணமாக நடிப்பது என்பது வேறு அதை விஜய் சேதுபதி அவர்கள் கன கச்சிதமாக செய்துவிட்டார்.
ஹாலிவுட் படம் போல: விடுதலை 2 படத்தை பார்க்கும்போது ஒரு புத்தகம் படித்த நிறைவு இருந்தது. அது திரைக்கதையிலும் அழகாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தின் பல காட்சிகளை பார்க்கும் போது, இது தமிழ் படமா இல்லை ஹாலிவுட் திரைப்படமா என்று யோசிக்கும் அளவுக்கு அந்த செட்டு, காடு என அனைத்துமே அழகாக கச்சிதமாக போடப்பட்டிருந்தது. இந்த படத்தில் உழைத்த அனைத்து டெக்னிஷனும் மிகவும் கடுமையாக உழைத்து ஹாலிவுட் தரத்திற்கு ஒரு காட்சியை உருவாக்கி இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் வசனம்: திரைப்படத்தில் வசனங்கள் அனைத்தும் ஒரு போராளியை குறிக்கும் வசனமாகவே உள்ளது. குறிப்பாக பிரபாகரன் குறித்து சில வசனங்கள் வந்திருந்தன. வெற்றிமாறனே ஒரு கம்யூனிஸ்டாக மாறி வசனம் எழுதி இருக்கிறார். அவர்கள் எப்படி பேசுவார்கள், அந்த வார்த்தையின் நெளிவு என அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டு அந்த ஸ்லேங்கில் வசனத்தை வைத்து இருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் சில கருத்துக்கள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதால், அது பலரின் கண்ணை உறுத்துகிறது.
சீமான் மட்டும் நடித்திருந்தால்: படத்தின் ஒரு சில வசனங்கள் சீமானுக்கு ஆதரவாக இருந்தது, சீமானே ஒரு மேடையில் இந்த படத்தில் விஜய் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. அந்த நேரம் வேறு வேலை இருந்ததால் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். விஜய் சேதுபதிக்கு பதில் சீமான் மட்டும் நடித்திருந்தால் இந்த படத்தின் கதையே வேறு மாதிரி சென்று இருக்கும்.வெற்றிமாறன் மட்டும் சீமானுக்காக காத்திருந்து அவரை வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தால் இந்த படத்தின் பார்வையே வேறாக இருந்திருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











