twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சசிகுமாரின் 'வெற்றிவேல்' மற்றொரு 'வானத்தைப்போல'... பாராட்டும் ரசிகர்கள்

    By Manjula
    |

    சென்னை: சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் வெற்றிவேல்.

    300 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான தாரை தப்பட்டை அவருக்கு கைகொடுக்கவில்லை.

    இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் வெற்றிவேல் ரசிகர்களைக் கவர்ந்ததா? பார்க்கலாம்.

    தம்பிக்காக அண்ணன்

    ''தம்பிக்காக ஒரு அண்ணன் வாழ்க்கையைத் தியாகம் செய்யும் கதை. நீண்ட நாளுக்குப் பின் ஒரு நல்ல படம் பார்த்தேன்'' என்று ஜார்ஜ் பாராட்டியிருக்கிறார்.

    ஒருமுறை

    வழக்கமான சசிகுமார் படம்தான். குடும்ப காட்சிகள் மற்றும் கதைக்காக வெற்றிவேல் ஒருமுறை பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார் கார்த்தி.

    சுந்தரபாண்டியன்+ நாடோடிகள்

    'சுந்தரபாண்டியன்' பார்த்து இருப்பீங்க 'நாடோடிகள்' பார்த்து இருப்பீங்க ரெண்டு படத்தையும் சேர்த்து பார்த்திருக்கீங்களா? என்று கலாய்த்திருக்கிறார் மார்ட்டின்.

    முதல் பாதி

    'வெற்றிவேல் முதல் பாதி நன்றாக உள்ளது. குறிப்பாக தம்பி ராமையா காமெடி சூப்பர்' என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார் அஜீத் அண்ணாதுரை.

    யூகிக்கக் கூடிய

    ''யூகிக்கக் கூடிய திரைக்கதை தான் எனினும் பி,சி செண்டர் ரசிகர்களை வெற்றிவேல் திருப்திப்படுத்தும்'' என்று சதீஷ் கூறியிருக்கிறார்.

    மொத்தத்தில் இன்று வெளியாகியிருக்கும் வெற்றிவேல் தங்களுக்குப் பிடித்திருப்பதாக, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Sasikumar, Mia George starrer Vetrivel Worldwide Released on Today. Written and Directed by Vasantha Mani -Live Audience Response.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X