10 வருஷம் ஆனாலும் இந்த புலி உறுமும்.. வேட்டைக்காரன் இயக்குநர் பாபுசிவன் இப்போ என்ன பண்றாரு தெரியுமா?

சென்னை: கில்லி படம் வரை காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விஜய்க்கு பக்கா மாஸ் ஆக்‌ஷன் படமாக அமைந்தது வேட்டைக்காரன் தான்.

2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பாபுசிவன் இயக்கத்தில் வெளியான வேட்டைக்காரன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஹிட் பாடல்கள்

சூப்பர் ஹிட் பாடல்கள்

வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற புலி உறுமுது, நான் அடிச்சா தாங்கமாட்ட, கரிகாலன் கால போல, சின்னத்தாமரை, என் உச்சி மண்டைல என அத்தனை பாடல்களும், படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. விஜய் ஆண்டனி இசையில் அனைத்து பாடல்களுமே இன்றளவும் விஜய் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகின்றன.

பக்கா கமர்ஷியல்

காமெடி, பன்ச் டயலாக், ஆட்டம் பாட்டம் என நடிகர் விஜய் ரசிகர்களுக்காகவே செதுக்கிய பக்கா கமர்ஷியல் படம் வேட்டைக்காரன், இப்போ தளபதி விஜய்க்கு இப்படியொரு படம் பண்ணா இன்னும் வெறித்தனமா இருக்கும் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

வெறித்தனம்

வேட்டைக்காரன் படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும், படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

போலீஸ்காரன் பத்தாதுடா

வேட்டைக்காரன் படத்தில் வில்லன்களை பார்த்து நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களை 10YearsOfVettaikaran ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா வேற வேற வேட்டைக்காரன் தான் டா வேணும்

இந்தியளவில் டிரெண்டிங்

ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய தளபதி ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கவே தேவையில்லை. 10YearsOfVettaikaran ஹாஷ்டேக்கை உருவாக்கி தற்போது இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பயம்

வில்லன் வேதநாயகத்திடம் அவனது டீ கடைக்கு வந்து விஜய் சொல்லும் பயம் பன்ச் டயலாக் காட்சிகளும் ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

புதுசா ஒன்னு சிக்கியிருக்கு

விஜய்யின் வேட்டைக்காரன் படம் கலவையான விமர்சனங்களிடையே 2009ம் ஆண்டு ஓடியது. வேட்டைக்காரன் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்ய அஜித் ரசிகர்களுக்கு புது என்டர்டெயின்மென்ட் ஒன்னு சிக்கியிருக்கு என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு எதிரான தங்களின் அடாவடியை வழக்கம் போல் தொடங்கியுள்ளனர்.

அனுஷ்காவ இனி இப்படி பார்க்க முடியுமா?

வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா செம்ம செக்ஸியாக நடித்திருப்பார். காமெடி, ரொமான்ஸ், டான்ஸ் என விஜய்க்கு போட்டியாக நடித்திருக்கும் அனுஷ்காவை இனி இப்படி பார்க்க முடியுமா என விஜய் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

பாபுசிவன்

பாபுசிவன்

விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபுசிவன் அதற்கு அடுத்து எந்த படத்தையுமே இயக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்ததால், தான் பாபுசிவன் அடுத்து அடுத்து படத்தை இயக்கமுடியவில்லை என்ற வதந்தியும் பரவியது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலை பாபுசிவன் தான் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X