மனுஷன் ஹீரோவா நடிச்சிருக்கலாம்.. டேனியல் பாலாஜி கல்லூரி கால போட்டோ..ஆதங்கப்படும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்ற நிலையில், அவரின் கல்லூரி கால போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் சிலர் மக்கள் மனதில் தங்கி விடுவார்கள் அப்படி மக்கள் மனதில் அந்த காலத்தில் இடம் பிடித்தவர்கள் தான் நம்பியார், அசோகன், செந்தாமரை போன்றவர்கள் இவர்கள் வில்லனாக நடித்து பின் நாளில் குணசித்திர நடிகராக மாறினார்கள். அப்படி மக்கள் மனதில் வில்லனாக இடம் பிடித்தவர் தான் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் அடுத்தடுத்து இவர் மாற்றும் கெட்டப்பும், நுனி நாக்கு ஆங்கிலம் கலந்த அந்த வசனத்தையும் மக்கள் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள்.

Vettaiyaadu Vilaiyaadu actor Daniel balaji young look photos trending on social media

நடிகர் டேனியல் பாலாஜி: சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையால்,சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத் தயாரிப்பு படிப்பினை படித்தார். இதைத்தொடர்ந்து சினிமா வாய்ப்பை தேடி அலைந்த இவருக்கு கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மருதநாயகம் படம் பாதியில் நின்று போனதால், சின்னத்திரை பக்கம் வந்த இவர், ராதிகா சரத்குமார் இயக்கிய சித்தி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்தார்.

உயிரிழந்தார்: அதன் பிறகு தான் இவருக்கு டேனியல் பாலாஜி என பெயர் வந்தது. அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்ததால் தொடர்ந்து படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என நடித்து வந்தார். நடிகராக ஜெயித்த டேனியல் பாலாஜியின் இயக்குநராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலேயே நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கண் தானம் செய்தார்: டேனியல் பாலாஜியின் உடல் சென்னையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர், நடிகர் விஜய்சேதுபதி, அதர்வா என பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த டேனியல் பாலாஜிக்கு நடிகர் கமல் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதே போல ராதிகா, ஆண்ட்ரியா என பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்திருந்த நிலையில், நேற்றே சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மனுஷன் என்ன அழகு: இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜி தரமணி திரைப்பட கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது, எடுத்த அவரின் இளமைக்கால போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மனுஷன் ஹீரோவாவே நடிச்சிருக்கலாம் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X