Vettaiyaadu Vilaiyaadu: கண்ணு வேணும்னு கேட்டியா.. தியேட்டர்களை தெறிக்கவிடும் வேட்டையாடு விளையாடு!

சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் நவீன மயமாக்கப்பட்டு மீண்டும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் பாபா படம் தியேட்டர்களில் ரீமாஸ்டரிங் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

கமல்ஹாசனின் ஃபேன் பாயாக கெளதம் மேனன் இந்த படத்தில் தரமாக சம்பவம் செய்துள்ளார் என ரசிகர்கள் இன்று வெளியானபுதிய படங்களை புறக்கணித்து விட்டு கமல் படத்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர்.

Vettaiyaadu Vilaiyaadu remastered version gets a huge response today in theaters

வெறித்தனமான படம்: காக்க காக்க படத்துக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரசிகர்களை மிரள வைத்த பக்காவான போலீஸ் த்ரில்லர் படமாக இருந்தது.

போலீஸ் அதிகாரியான ராகவன் தனது நண்பர் மகளை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் நியூயார்க் செல்ல பல இளம் பெண்களை கொலை செய்த சைக்கோ கொலைகாரர்களை வேட்டையாடும் கதை தான் இந்த வேட்டையாடு விளையாடு.

எல்லா பாடல்களும் ஹிட்: பார்த்த முதல் நாளே பாடல் அந்த சமயத்தில் பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கற்க கற்க இன்ட்ரோ பாடல் தொடங்கி நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என வில்லன்களுக்கு போடப்பட்ட ஐட்டம் சாங் வரை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேறலெவல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா ஒரு பக்கம் நடிப்பில் மிரட்ட, மலையாள நடிகையான கமாலினி முகர்ஜி ஃபிளாஷ்பேக் போர்ஷனில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்கள் மனங்களில் பச்செக் என ஒட்டிக் கொண்டார்.

கண்ணு வேணும்னு கேட்டியா: ரவுடிகள் இடத்துக்கே சென்று ராகவன் கெத்தாக "என் கண்ணு வேணும்னு கேட்டியாமே.. என கண்ணை எடுத்துக்கோ என சொல்வது போல விரித்துக் காட்டும் காட்சிகளுக்கு எல்லாமே அப்போது தியேட்டரில் எப்படி விசில் சத்தம் பறந்ததோ அதை விட டபுள் மடங்காக இன்று வெளியாகி உள்ள வேட்டையாடு விளையாடு படத்தை 2கே கிட்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vettaiyaadu Vilaiyaadu remastered version gets a huge response today in theaters

கமல் எப்பவுமே மாஸ்: சோஷியல் மீடியாவில் மாரி செல்வராஜ், கமல்ஹாசன் சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய புரிதலில் அப்படியொரு கடிதம் எழுதி விட்டேன். பரியேறும் பெருமாளை பார்த்து பாராட்டியவர் கமல் சார், மாமன்னன் படத்தை பார்த்த முதல் நபரும் அவர் தான் அந்த விழாவில் எமோஷனலாகி அப்படி பேசிட்டேன் என மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ள நிலையில், கமல் எப்பவுமே மாஸ் தான் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X