இறந்தும் பலரை வாழவைக்கும் டேனியல் பாலாஜி.. உறவினர்கள் சொன்ன தகவல்!

சென்னை: வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், அவர் கண் தானம் செய்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரையில் சித்தி சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய டேனியல் பாலாஜிக்கு திருப்பு முனையாக அமைந்தது காக்கா காக்கா திரைப்படம் இந்த படத்தில சூர்யாவின் நண்பனாக நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். அந்த படத்திற்கு பின் டேனியல் பாலாஜிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இவர் பெரும் கௌதம் மேனன்,வெற்றி மாறன் படத்தில் நடித்தது இல்லாமல் அவர்களுக்காக அந்த படத்தில் நடித்தும் இருக்கிறார்.

Vettaiyaadu Vilaiyaadu Villain Daniel Balaji Eye Donation

திடீர் மறைவு: இந்நிலையில் நேற்று டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு அவரச சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஏற்கனே இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி கேள்விப்பட்டதும் கௌதம் மேனன், வெற்றிமாறன் மற்றும் திரைப்பிரபலங்கள் மருத்துவமனையில் குவிந்தனர். டேனியல் பாலாஜி தனது கண்களை தானமாக கொடுத்து இருப்பதால், அதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை இறுதிச்சடங்கு: கண்தான அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரின் உடல் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டு அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்படும். பின் திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தும் பலரை வாழவைக்கும் டேனியல் பாலாஜி நல்ல உள்ளத்தை பாராட்டவே வார்த்தை இல்ல என இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து அவரை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X