Amitabh bachchan Net worth: பலகோடி சொத்து.. பல தொழில்களில் முதலீடு.. அமிதாப் பச்சனின் சொத்து விவரம்!
சென்னை: ஷாஹேந்ஷா, மகாநாயக் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் 82 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு பிரபலங்கள், நெருங்கிய ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் அவரின் சொத்து விவரத்தை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
அமிதாப் பச்சன் 1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் அலகாபாத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை அலகாபாத்தில் முடித்த இவர்.டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள கிரோரி மால் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து, 1969ம்ஆண்டு வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் அமிதாப் பச்சன். முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசியத்திரைப்பட விருதை வென்றார்.

பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த், ப்யார் கீ கஹானி, பர்வானா, க்குட்டி, ப்யார் கா கர் போன்ற திரைப்படங்களில் நடித்தார் இதில், ஆனந்த் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதைத்தொடர்ந்து ஷோலே என்ற மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்திக் கொண்ட அமிதாப் பச்சனுக்கு,பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
82வது பிறந்த நாள்: நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கும் அமிதாப் பச்சனின் 82வது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமிதாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1600 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
முதலீடு செய்துள்ள தொழில்கள்: நடித்து உழைத்து சம்பாதித்த இந்த பணத்தை அமிதாப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் (ABCL) என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கும் இவர் அதன் மூலம் பணத்தை ஈட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல், உஜாஸ் எனர்ஜியிலு, ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜ் இணையதளமான ஜிட்டுவிலும், ஸ்டாம்பீட் கேபிட்டல் என்ற தரகு நிறுவனத்திலும் முதலீடு செய்து உள்ளார். இதன் மூலமாகவும் கணிசமான வருமானம் வந்து கொண்டு இருக்கிறது.
சொத்து மதிப்பு: 82 வயதான போதும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் அமிதாப் பச்சன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கல்கி திரைப்படத்தில் அஸ்வதாம என்ற ரோலில் நடித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல் நேற்று வெளியாகி தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் வேட்டையன் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக 7 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு மும்பையில் ரூ. 112 கோடியில் ஒரு பங்களாவும், ரூ.40.97 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள இரண்டு மெர்சிடிஸ் மற்றும் ஒரு ரேஞ்ச் ரோவர் உட்பட 16 வாகனங்களும் உள்ளன. மேலும் ரூ. 260 கோடி மதிப்புள்ள Private jet ஒன்றையும் வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











