வேட்டையன் நடிகை இப்படி வெளிப்படையா இருக்காரே.. பீச்சில் புத்தாண்டை கொண்டாடிய துஷாரா விஜயன் பிக்ஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை துஷாரா விஜயன் புத்தாண்டை முன்னிட்டு நீச்சல் உடையில் பீச்சில் புத்தாண்டை கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். நட்சத்திரங்கள் நகர்கிறது ரெனேவா இப்படி என ரசிகர்கள் வாய் பிளந்து அவரது அழகை ரசித்து வருகின்றனர்.

2019ம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன். பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் சேலை கட்டி வந்து அவர் முதலிரவில் போட்ட குத்தாட்டத்தை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். தொடர்ந்து போல்டான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வரும் துஷாரா விஜயன் நிஜத்திலும் தான் செம போல்டான பொண்ணு தான் என்பதை இந்த லேட்டஸ்ட் பீச் சைட் புகைப்படங்கள் மூலமாகவும் நிரூபித்துள்ளார்.

Vettaiyan actress Dushara Vijayan shares her New Year swim wear photos

தூள் கிளப்பும் துஷாரா: 2019ம் ஆண்டு தான் சினிமாவில் நடிகையாக என்ட்ரியானார் துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த அவரது நடிப்பை பார்த்து பா. ரஞ்சித்தே மிரண்டு விட்டார். அவருக்காகவே பிரத்யேகமாக ரெனே எனும் கதாபாத்திரத்தை உருவாக்கி நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கி இருந்தார். ஓரினச்சேர்க்கை காதல், சாதி மறுப்பு காதல் என பல விஷயங்களை அடுக்கி அந்த படத்தை எடுத்திருந்தார் பா. ரஞ்சித் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் படு போல்டான கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வென்றார்.

வேட்டையன் படத்தில்: அநீதி, கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் கடந்த ஆண்டு நடித்த துஷாரா விஜயன் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் நடித்து வரும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக சாய் தன்ஷிகா நடித்ததை போல இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக துஷாரா விஜயன் நடித்து வருகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Vettaiyan actress Dushara Vijayan shares her New Year swim wear photos

பீச்சில் பச்சை கலர் நீச்சல் உடையில்: இன்ஸ்டாகிராமில் திஷா பதானி, மெளனி ராய், நயன்தாரா என ஏராளமான நடிகைகள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை தீவு ஒன்றில் கொண்டாடிய துஷாரா விஜயன் பீச்சில் பச்சை நிற நீச்சல் உடையில் பக்காவாக நடந்து செல்லும் போஸ்களை கொடுத்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

இன்கிரெடிபிள்: துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் பீச் சைடு போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். கடல் தேவதை அப்படியே நடந்து வருவது மாதிரியே இருக்கு என்றும் இன்கிரெடிபிள் என ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ள நிலையில், துஷாராவுக்கு ஜாக்பாட் தான் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X