ஒன்றாக பிறந்த நாள் கொண்டாடிய மஞ்சு வாரியர் அனுராக் காஷ்யப்.. உடனே முடிச்சு போட்ட இணையவாசிகள்!

கொச்சி: மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதனால் இவர் நடிக்கும் மலையாளப்படங்களையும் ரசிகர்கள் தேடித் தேடி பார்கின்றனர். இந்நிலையில் மஞ்சு வாரியர் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு ஒரு சூப்பர் ஸ்டாராகவே நடிகை மஞ்சுவாரியர் உருவாகியுள்ளார். இவர் தமிழில் எண்ட்ரி கொடுத்த படம் அசுரன். அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். திருமண வயதில் உள்ள மகனுக்கு தாயாக நடித்த நடிகை மஞ்சு வாரியர் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலமும், தெளிவான தென் தமிழகத்து தமிழ் உச்சரிப்பின் மூலமும் அட்டகாசப்படுத்தியிருப்பார்.

manju warrier anurag kashyap vettaiyan

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரு மஞ்சு வாரியர், தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடலுக்கு செம ஸ்டைலாக நடனம் ஆடி, அசத்தியிருந்தார். இதுமட்டும் இல்லாமல், இந்தப் பாடலில் இவரது எக்ஸ்பிரஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைவிடவும் சிறப்பாக இருப்பதாக பலர் கூறியிருந்தனர்.

மஞ்சு - அனுராக்: இப்படியான நிலையில் மஞ்சு வாரியர் கடந்த 10ஆம் தேதி தனது 46வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்து கூறினர். குறிப்பாக வேட்டையன் படக்குழு அவருக்கு சிறப்பு வாழ்த்து கூறியது. இவரது பிறந்த நாளுக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இணையம் முழுவதும் அன்றைய தினம் இவரது பிறந்த நாள் வாழ்த்துகளாகத்தான் இருந்தது. இந்நிலையில் மஞ்சு வாரியர் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் உடன் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அன்றைய தினம் அனுராக் காஷ்யப்புக்கும் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

manju warrier anurag kashyap vettaiyan

பிறந்த நாள் கொண்டாட்டம்: இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில், அனுராக் காஷ்யப் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து பிறந்த நாள் கேக் வெட்ட, கேக்கில் வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்திகளை ஊதுகின்றனர். அதேபோல் இந்தப் பதிவுக்கு, " இந்த பிறந்த நாள் இதுவரை நான் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலேயே மிகவும் க்யூட்டான பிறந்தநாள். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார். மேலும் அனுராக் காஷ்யப்பை டேக் செய்துள்ளார்.

manju warrier anurag kashyap vettaiyan

முடிச்சு: இந்த புகைப்படத்தைப் பார்த்த பலர், பலவிதமான பேசி வருகின்றனர். அதாவது, மஞ்சு வாரியரும் அனுராக் காஷ்யப்பும் டேட் செய்து வருகின்றார்கள் என ஏதேதோ கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் அது அவர்களின் தனிப்பட்ட முடிவுகள் எனவும் சில பதில் கூறி வருகின்றனர். அனுராக் காஷ்யப்பைப் பொறுத்தவரையில், இரண்டு திருமணங்கள் செய்து இரண்டும் விவாகரத்தில் முடிந்துள்ளது. அதேபோல் மஞ்சு வாரியரைப் பொறுத்தவரையில் ஒரு முறை திருமணம் நடந்து, அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஃபுட்டேஜ் என்ற படம் ஒன்றில் பணியாற்றினர். இந்நிலையில் இவர்கள் பிறந்த நாள் கொண்டாடியதை, பலரும் பலவிதமாக முடிச்சு போட்டு பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X