Vettaiyan: சூப்பர் ஸ்டார் யார் தோள் மேல கை போட்டு இருக்காருனு பாத்தீங்களா? ஃபோட்டோ செம மாஸா இருக்கே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. படம் குறித்த அப்டேட்டுகளை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டார் மனைவியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது அனிருத் எரா என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு, டாப் கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகின்றார். தமிழ் சினிமாவைக் கடந்து, ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களிலும் தொடர்ந்து இசை அமைத்து வருகின்றார். இன்றைய இணைய உலகத்திற்கு ஏற்ற வகையில், அதாவது ரீல்ஸ்களில் அதிகம் இடம் பெறும் அளவிற்கு வேகமான பீட்ஸ் பாடல்களை கொடுத்து இந்த எராவை தனதாக்கி அரியாசனம் அமைத்து அமர்ந்துள்ளார்.

vettaiyan manju warrier rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மட்டும் இல்லாமல், தொடர்ந்து மார்க்கெட் உள்ள நடிகராக இன்றைக்கும் உள்ளார். மாஸ் ஓப்பனிங், ரஜினியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பைசா வசூல் என தயாரிப்பாளர்களுக்கு இன்றும் நம்பிக்கை கொடுத்துக் கொண்டு உள்ளார்.

vettaiyan manju warrier rajinikanth

வெற்றி: இன்றைய சினிமா வசூலை வைத்துத்தான் என முடிவான பின்னர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் வசூல் லிஸ்ட்டில் தனது படங்களை வைத்துள்ளார். கடைசியாக இவர் கதாநாயகனாக நடித்த ஜெய்லர் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. வேட்டையன் படத்தில் இருந்து முதலில் வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

vettaiyan manju warrier rajinikanth

சூப்பர் ஸ்டார்: இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரின் தோள் மீது கைபோட்டு டீயோ அல்லது காஃபி குடிப்பதைப் போல் உள்ளது. இந்தப் புகைப்படத்தில் இருவரும் செம அழகாக உள்ளதாகவும், மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டாருக்கு பொருத்தமான ஜோடியாகவும் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் மற்றொரு புகைப்படத்தில், அமிதாப் பச்சனுக்கு மஞ்சு வாரியரை சூப்பர் ஸ்டார் அறிமுகம் செய்து வைக்கின்றார். இந்த புகைப்படம் குறித்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

vettaiyan manju warrier rajinikanth

மஞ்சு வாரியர்: இந்தப் படத்தில் மஞ்சு வாரியரியரின் கதாபாத்திரத்தின் பெயர் தாரா என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதனால் இவர் நடிக்கும் மலையாளப்படங்களையும் ரசிகர்கள் தேடித் தேடி பார்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

vettaiyan manju warrier rajinikanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X