பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடந்த காலணித் திருவிழா 2024.. தொடங்கிவைத்த வேட்டையன் பட நடிகை!

சென்னை: சென்னை உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நடைபெற்று வரும் 'காலணித் திருவிழா 2024' என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகை ரித்திகா சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரித்திகா சிங் அறிமுகமானார். அதில் பாக்ஸராக நடித்த ரித்திகா சிங் முதல் படத்திலேயே பிரபலமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை ரித்திகா சிங்கிற்கு கொடுத்தது. இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார்.

Vettaiyan Actress Ritika Singh Inaugurated the Sneaker Festival 2024 at Phoenix Marketcity

அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தில் நடித்த ரித்திகா சிங், அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

காலணித் திருவிழா 2024: இந்நிலையில் நடிகை ரித்திகா சிங், பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நடைபெற்று வரும் 'காலணித் திருவிழா 2024' என்னும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அங்குள்ள கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். அவரது வருகையால் அந்த கடையின் உரிமையாளர்களும், விற்பனையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நைக், ரீபோக், பூமா, அடிடாஸ், ஸ்கெச்சர்ஸ், லைப் ஸ்டைல், கிளார்க்ஸ், ஹஷ் பப்பீஸ், டீசல், ஆல்டோ, பாட்டா, ஐஎன்சி 5, மோச்சி, சார்லஸ் & கீத், பேலெஸ், மெட்ரோ, ஜாக் & ஜோன்ஸ், அர்மானி எக்ஸ்சேஞ்ச், ஆசிக்ஸ், ஷாப்பர் ஸ்டாப், தி கலெக்டிவ், எச்&எம் மற்றும் பாரெவர் உள்ளிட்ட 21 பிராண்டுகள் உள்ளன. இந்த ஷாப்பிங் திருவிழாவையொட்டி ஜனவரி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Vettaiyan Actress Ritika Singh Inaugurated the Sneaker Festival 2024 at Phoenix Marketcity

ஜனவரி 11ந் தேதி வரை: காலணித் திருவிழா 2024 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான நைக், பூமா, அடிடாஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் ஷூக்கள் மற்றும் காலணிகளை வாங்கினார்கள். 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு விருப்பமான காலணிகளை தேர்வு செய்து வாங்கினார்கள். இந்த நிகழ்ச்சி புது விதமான காலணிகளை அதிகம் விரும்புபவர்களுக்கும் பல்வேறு பிரீமியம் பிராண்டுகளை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்களுக்கும் ஒரு சிறப்பான பிரத்யேக ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும் என்று பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி தெரிவித்துள்ளது.

Vettaiyan Actress Ritika Singh Inaugurated the Sneaker Festival 2024 at Phoenix Marketcity

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி: பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம், சில்லறை வர்த்தகம் சார்ந்த மால்களை துவக்கி சொத்துக்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மால்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள பீனிக்ஸ் மால்களில் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கான அனைத்து பிராண்ட் நிறுவனங்களும், சாப்பிடுவதற்கான ஓட்டல்களும், பொழுது போக்குவதற்கான தியேட்டர்களும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மும்பை, புனே, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பீனிக்ஸ் மால்கள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X