Vettaiyan Audio Launch: எங்கிட்ட கோல்டன் விசா இருக்கு.. சூர்யாவுக்கு தான் முதல் நன்றி.. ஞானவேல் நச்!

சென்னை: இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களை ஒரே படத்தில் கொண்டு வர முடியுமா என்பது பலருக்கும் கனவாக உள்ள நிலையில், அதை நான் சாதித்துக் காட்ட என்னிடம் சூப்பர் ஸ்டார் எனும் கோல்டன் விசா இருப்பது தான் காரணம் என வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் த.செ. ஞானவேல் பேசியதும் அரங்கமே அதிர்ந்தது.

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், வெளியே டிக்கெட் வைத்திருப்பவர்கள் நின்றுக் கொண்டு எங்களுக்கு பதில், போலி டிக்கெட் வைத்திருப்பவர்கள் உள்ளே சென்றுள்ளதாக ஒரு பிரச்சனையும் வெடித்தது.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

ஆனால், உள்ளே அனிருத் லைவ் பர்ஃபார்மன்ஸ் மற்றும் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி மற்றும் துஷாரா விஜயனின் மனசிலாயோ வைப் உள்ளிட்டவை ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

சூர்யாவுக்கு நன்றி: நான் இவ்வளவு பெரிய மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் சூர்யா சார் தான். அவருக்கு இந்த வேட்டையன் இசை வெளியீட்டு விழா மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என வேட்டையன் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் கூறியுள்ளார்.

ஜெய்பீம்: சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தைக் கொடுத்த ஞானவேல் ஒட்டுமொத்த பிரபலங்களையும் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தின் வெற்றி தான் உடனடியாக சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணமே என்றார்.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

ஜாலியான கதை வேண்டாம்: தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்த இயக்குநர்களை எல்லாம் ரஜினி சார் அழைத்து பாராட்டுவார். நானும் நம்மை அழைப்பார் என அடிக்கடி புதிய சட்டையை அணிந்துக் கொண்டு ரெடியாகி நிற்பேன். ஆனால், படம் வெளியாகி 2 வாரம் ஆகியும் ரஜினி சார் அழைக்கவில்லை. திடீரென செளந்தர்யா ரஜினிகாந்த் அப்பாவுக்கு கதை இருக்கா? படம் பண்ணலாம் என்றதும் பாராட்டு கேட்க நினைச்ச எனக்கு படமே கிடைக்குதா? என ஷாக் ஆகி விட்டேன். முதலில் ஜாலியான கதையைத்தான் எடுத்துச் சென்றேன். ஆனால், சூப்பர் ஸ்டார் தான் வேட்டையன் படத்தின் லைன் நல்லா இருக்கு, இதை டெவலப் பண்ணுங்க என்றார்.

கோல்டன் விசா: ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் எப்படி இயக்கினேன் என்றால் என்னிடம் ரஜினிகாந்த் எனும் கோல்டன் விசா கிடைத்தது தான் காரணம் என்றும் த.செ. ஞானவேல் கூறியுள்ளார். படத்தின் டீசரில் பெரிதாக கதையை ரிவீல் செய்யாமல் ஞானவேல் உள்ளார். படத்தின் டிரெய்லரில் இன்னும் சில விஷயங்கள் வெளியே வரும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X