Vettaiyan: காவாலா சாங் ஸ்டைலில் செம்ம மஜா... வேட்டையனில் கலங்கடிக்கப் போகும் துஷாரா விஜயன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் படத்தில் செம்ம மஜாவான சம்பவம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேட்டையனில் காத்திருக்கும் மஜா சம்பவம்
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் ரஜினியின் தலைவர் 170, தலைவர் 171 படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.

 Vettaiyan: Big Mass Number Song Add Playing Dushara Vijayan Dance in Vettaiyan

தலைவர் 170 படத்தின் டைட்டில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதன்படி தற்போது வேட்டையன் டைட்டிலில் உருவாகி வருகிறது தலைவர் 170. ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஜெயிலர் ஸ்டைலில் ஆக்‌ஷன் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஜெயிலர் பட ஸ்டைலில் வேட்டையனிலும் செம்ம மஜாவான சம்பவம் இருக்கிறதாம். ஜெயிலர் படத்தில் இருந்து முதல் சிங்கிளாக வெளியான 'காவாலா' பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அனிருத்தின் இசையும் தமன்னாவின் ஆட்டமும் ரசிகர்களை கிறங்கடித்தன. மேலும் ஜெயிலர் ரிலீஸானதும் தியேட்டரிலும் இந்தப் பாடலை ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடித் தீர்த்தனர்.

புஷ்பா படத்தின் 'ஊ சொல்றீயா மாமா' பாடலுக்குப் பின்னர் தரமான ஐட்டம் சாங்காக உருவாகியிருந்தது ஜெயிலர் படத்தின் 'காவாலா.' இப்போது அதே ஸ்டைலில் வேட்டையன் படத்திலும் ஒரு ஐட்டம் சாங் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடலில் துஷாரா விஜயனின் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களை கலங்கடிக்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தான் துஷாரா விஜயனின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியிருந்தன. பிகினியில் பீச் மணலில் வலம் வந்த துஷாரா விஜயன், அப்படியே புத்தாண்டையும் கொண்டாடியிருந்தார். இதற்கே தாங்காத ரசிகர்கள், வேட்டையன் படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என படக்குழுவினர் பேசிக் கொள்கிறார்களாம்.

ஜெயிலர் முதல் சிங்கிளாக 'காவாலா' பாடல் வெளியானதை போல, வேட்டையன் படத்தில் இருந்தும் துஷாரா விஜயனின் ஐட்டம் சாங் தான் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இன்னும் 3 பாடல்கள், 2 தீம் மியூசிக் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X