Vettaiyan Day 6 Box Office: தமிழ்நாட்டையே உலுக்கிய அதிக கனமழை.. வேட்டையன் 6வது நாள் வசூல் என்னாச்சு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் உலகளவில் முதல் 4 நாட்களில் 240 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

ஆயுத பூஜை, விஜயதசமி, சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறையை டார்கெட் செய்து வேட்டையன் படம் வெளியான நிலையில், அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

vettaiyan vettaiyan box office chennai rains

ஆனால், திடீரென பருவ மழை வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸுக்கு எமனாக இப்படி மாறும் என லைகா நிறுவனம் கொஞ்சம் கூட நினைத்திருக்காது. அந்த அளவுக்கு 5வது நாள் மற்றும் 6வது நாள் வசூல் மிகப்பெரிய அடிவாங்கியுள்ளது.

மாஸ் அண்ட் கிளாஸ்: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ரக்‌ஷன், கிஷோர், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் போலி என்கவுன்ட்டர்களையும் ஆன்லைன் கோச்சிங் கிளாஸ் மோசடிகளையும் இயக்குநர் ஞானவேல் தோலுரித்துக் காட்டியிருந்தர். ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக ஆரம்பத்தில் சுருட்டில் இன்ட்ரோ வைத்தும் கிளைமேக்ஸில் ஹெலிகாப்டரில் பறந்து வரும் ஷாட் எல்லாம் வைத்து அதகளப்படுத்தினார்.

vettaiyan vettaiyan box office chennai rains

வேட்டையன் 6வது நாள் வசூல்: வேட்டையன் திரைப்படம் முதல் 4 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5வது நாளான திங்கட்கிழமை வசூல் மழை காரணமாக ரொம்பவே குறைந்து வெறும் 5 கோடி ரூபாயை மட்டுமே இந்தியளவில் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். 6வது நாளான நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கூட வேட்டையன் திரைப்படம் 4.75 கோடி வசூல் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 17.8 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தன.

உலகளவில் வேட்டையன் வசூல்: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் காட்சிக்கெல்லாம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து வருகின்றனர். கனமழை காரணமாக படத்தின் வசூல் சரிந்துள்ள நிலையில், இதுவரை வேட்டையன் திரைப்படம் உலகளவில் 255 கோடி முதல் 260 கோடி வரை ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார முடிவில் மீண்டும் லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X